/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பட்டறை தொழிலாளி உருவாக்கிய மினி ஜீப்: லிட்டருக்கு 30 கி.மீ., செல்லும் அசத்தல் வாகனம்
/
பட்டறை தொழிலாளி உருவாக்கிய மினி ஜீப்: லிட்டருக்கு 30 கி.மீ., செல்லும் அசத்தல் வாகனம்
பட்டறை தொழிலாளி உருவாக்கிய மினி ஜீப்: லிட்டருக்கு 30 கி.மீ., செல்லும் அசத்தல் வாகனம்
பட்டறை தொழிலாளி உருவாக்கிய மினி ஜீப்: லிட்டருக்கு 30 கி.மீ., செல்லும் அசத்தல் வாகனம்
ADDED : ஏப் 28, 2024 11:04 AM

தேனி மாவட்டம், சின்னமனுார், காமாட்சிபுரத்தை சேர்ந்த இரும்பு பட்டறை தொழிலாளி ஈஸ்வரன் 60. 20 ஆண்டுகளாக பட்டறை நடத்தி வருகிறார்.
இவர் வேளாண் கருவிகள், வீட்டு உபயோக கருவிகளான மண்வெட்டி, கொத்து, அரிவாள், அரிவாள்மனை, பிக்காட்சி (மண் உழும் கருவி), துாம்பா (மண் வெட்டும் கருவி), கோடாரி உள்ளிட்ட கருவிகளை பட்டறையில் தயார் செய்து கிராமங்களுக்கு பஸ்களில் கொண்டு சென்று விற்பனை செய்வார்.
இரும்பு கருவிகளை பஸ்களில் ஏற்றி கொண்டு செல்வதில் சிரமம் அடைந்தார். அலைச்சல் இன்றி ஒரு வாகனத்தில் வேளாண் கருவிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதின் செயல்வடிவம்தான் ஒரு லிட்டர் பெட்ரோலில் 30 கி.மீ., செல்லக்கூடிய இவரே உருவாக்கிய மினி ஜீப்!.
இந்த மினிஜீப்பை உருவாக்கிய பட்டறை தொழிலாளி ஈஸ்வரன் படிக்காதவர் என்றாலும், தேர்ந்த பொறியாளர் போல தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
'வேளாண், வீட்டு உபயோக கருவிகளை தயார் செய்து பஸ், ஆட்டோக்களில் சென்று விற்பனை செய்தேன். கருவிகளுக்கு கைப்பிடிகளை மொத்தமாக வாங்கி நானே செதுக்கி, தயார் செய்வேன். தினமும் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைக்கும். குடும்ப செலவு போக மீதி பணத்தை சேமித்து, இரு மகள்கள், மகன் திருமணத்தை முடித்தேன். நான்காவது மகன் என்னுடன் பணி செய்கிறார்.
வேளாண் கருவிகளை பஸ்சில் சுமந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. லாபத்தில் போக்குவரத்திற்கே அதிகம் செலவானது. இதனால் ஒரு சிறிய வண்டியை தயாரிக்கும் எண்ணம் வந்தது. முதலில் காரில் 'பவர்' ஸ்டியரிங் தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என தெரிந்து அதுமாதிரி 'ஸ்டியரிங்' அமைப்பை 'வெல்டிங்'கில் உருவாக்கினேன்.
பின் ஸ்கூட்டி டூவீலரின் இன்ஜினை பொருத்திசைலன்சர் இணைந்தேன். வண்டி பாடி பில்ட்க்காக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 இரும்பு கட்டில்களின் இரும்பு தகரங்களை பிரித்து, வெல்டிங் செய்து இணைத்து மினிஜீப் மாடலை உருவாக்கினேன். பின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 டயர்களை பொருத்தினேன்.
விளக்கு வெளிச்சத்திற்காக பேட்டரி பொருத்தி இக்னீசியன் சுவிட்ச், முகப்பு விளக்கு சுவிட்ச், ஹாரன் அமைத்தேன். பின்புற வீல்களில் பிரேக் சிஸ்டம், ஆக்சிலேட்டர் உபகரணங்களை பொருத்தினேன். பின் மேற்கூரை, டிரைவர் சீட் என ரூ.80 ஆயிரம் மதிப்பில் மினிஜீப்பை தயாரித்துவிட்டேன்.
எல்லாம் அனுபவ பாடம்தான். மினிஜீப்பில் வியாபாரத்திற்கு செல்லும் போது ஸ்பீக்கரில் பொருட்களின் பெயர் கூறி விற்கிறேன். இதே போன்று மினி ஜீப் தயாரித்து பட்டுக்கோட்டையில் என் சகோதரருக்கு கொடுத்துள்ளேன்.
இந்த வாகனம் இருப்பதால், வேளாண் பொருட்களை விவசாயிகள் கேட்கும் நேரத்திற்கு உடனே சப்ளை செய்ய முடிகிறது என்றார்.
படிக்காமலே மெக்கானிக்கல் இன்ஜினியர் போல் சுயமாக ஒரு வாகனத்தை தயாரித்து ஓட்டி வருவது கிராமங்களில் இவருக்கு தனி மதிப்பை உருவாக்கி உள்ளது.
இவரை பாராட்ட 80727 03304

