தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/இசை தரும் போதை இல்லா வாழ்வு: கலைமாமணி சுசித்ரா நம்பிக்கை

இசை தரும் போதை இல்லா வாழ்வு: கலைமாமணி சுசித்ரா நம்பிக்கை

இசை தரும் போதை இல்லா வாழ்வு: கலைமாமணி சுசித்ரா நம்பிக்கை

3


ADDED : ஜூலை 19, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 10:37 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக இசைக்கலைஞர், ஹரிகதை நடத்துபவர், பட்டிமன்ற பேச்சாளர் என்ற பல முகங்கள் இவருக்கு. காந்த குரலாலும், இழையோடும் இசையாலும் இன்று பல மேடைகளை ஆண்டு கொண்டிருப்பவர் சென்னையை சேர்ந்த ‛கலைமாமணி' சுசித்ரா பாலசுப்பிரமணியன். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு மனம் திறக்கிறார்....

எம்.ஏ., மியூசிக்., எம்.பி.ஏ., படித்துள்ளேன். கர்நாடக இசை சங்கீதத்தில் எனது குரு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு டி.ஆர்., கமலா மூர்த்தி. வேறுயாருமல்ல; என் பாட்டி தான். மதுரை டி.என்.சேஷகோபாலன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பத்மா சாண்டில்யன் ஆகியோரிடமும் பயிற்சி பெற்றேன். மூன்று வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் கற்க துவங்கி, 18 வயதில் இருந்தே கதாகாலட்சேபம் செய்து வருகிறேன்.

30 ஆண்டாக கர்நாடக இசை பாடல்களை பாடி வருகிறேன். இதுவரை 6 ஆயிரம் மேடைகள் வரை கர்நாடக இசை, ஹரிகதை (இசை சொற்பொழிவு) பாடியிருப்பேன்.

பிரபுதேவாவின் 'பகீரா' படத்தில் ஒரு பாடலில் சில வரிகள் பாடியுள்ளளேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தோடு மேடை கச்சேரியில் இணைந்து பாடியது என் வாழ்நாள் பெருமை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளில் கர்நாடக இசை கச்சேரிகள் நடத்தியுள்ளேன். அங்கு கர்நாடக இசைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இளைஞர்கள் அதிகளவில் கற்கின்றனர்.

புகழுக்காக மட்டுமின்றி, இக்கலையை எப்படியாவது கற்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் கற்றால் சாதிக்கலாம். நான் இன்னும் ஆழமாக கற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு இசையை எடுத்து செல்ல விரும்புகிறேன்.

பட்டிமன்றங்களில் பேசுவது எனது இன்னொரு விருப்பம். சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் போன்றோரின் பட்டிமன்றங்களில் பேச்சாளராக இருந்துள்ளேன். அனைத்து மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பிற மொழிகள் கலப்பின்றி தாய் மொழியை கண்டிப்பாக பேச வேண்டும். இதனை நான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

தமிழக அரசு சார்பில் 'கலைமாமணி விருது' பெற்றுள்ளேன். இந்த விருது ஹரி கதைக்காக கிடைத்தது. ஹரி கதை நிகழ்ச்சியில் பேச்சு, இசை சேர்ந்தே வரும். சீதா, ருக்மணி கல்யாணம், கம்பராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள் பற்றிய கதைகளை நிகழ்த்தியுள்ளேன்.

மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் 'உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருது', தருமை ஆதினம் சார்பில் 'இசை கதாவாணி' விருது, பாரத்ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது உட்பட 41 விருதுகள் வரை பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

போதை கலாசாரத்தை ஒழிக்க இசையும் ஒரு நல்ல ஆயுதம் என்ற கருத்தில் உறுதியாக உள்ளேன். நம் முன்னோர் பாட்டிலில் மருந்து கொடுத்தவர்கள் அல்ல, பாடல் மூலம் மருந்து கொடுத்தவர்கள் தான். அந்தளவிற்கு இசை வலியை போக்கும்; மனதுக்கு அமைதியை தரும். சில நேரங்களில் இசை உயிரையே மீட்டு கொண்டு வரும்போது, போதையில் இருப்பவர்களை மீட்டு கொண்டுவர முடியாதா.

பள்ளிகளில் மாணவர்களுக்கு கர்நாடக இசையை கற்று கொடுத்தால் ஒழுக்கமாக வளருவார்கள். கலை அவர்களை கட்டிப்போட்டு விடும்; அவர்கள் சிந்தனை சிதறாது. மனம் நல்ல வழியையே சிந்திக்கும். இசை பயின்றால் போதை பொருட்களை பற்றியெல்லாம் சிந்திக்காமல், வருங்கால சந்ததி நல்லபடியாக உருவாகும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us