தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தொடர்ந்து நைட் டூட்டி நல்லது இல்லை தான் ஆனால், பாதிப்பை குறைக்க வழிகள் இருக்கு

தொடர்ந்து நைட் டூட்டி நல்லது இல்லை தான் ஆனால், பாதிப்பை குறைக்க வழிகள் இருக்கு

தொடர்ந்து நைட் டூட்டி நல்லது இல்லை தான் ஆனால், பாதிப்பை குறைக்க வழிகள் இருக்கு


ADDED : ஆக 22, 2026 01:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.டி.துறையில் நைட் டூட்டி இன்று பலரது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. இதனால் பல வகையில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. என்றாலும், இரவுப்பணி தவிர்க்க முடியாதது என்று ஆகிவிட்டதால், அதன் பாதிப்புகளை குறைக்க டாக்டர்கள் வழி காட்டுகின்றனர்.

10 ஆண்டுகளாக இரவு நேர பணி பார்க்கிறார் ஐடி ஊழியர் சத்யா. அவருக்கு நிறையவே பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், டாக்டர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடந்ததால், கணிசமான நிவாரணம் கிடைத்தது என்கிறார்.

இரவு முழுதும் வேலை என்பதால், பகலில் நீண்ட நேரம் தூங்குகிறேன். ஆனாலும் தூக்க கலக்கம் போகவில்லை; சோர்வாகவும் இருந்தது. இதை டாக்டரிடம் சொன்னபோது, மனித உடலின் ஹார்மோன் சமநிலையும் செரிமான செயல்பாடும் சூரிய ஒளியை அடிப்படையாக கொண்ட சர்க்காடியன் சுழற்சியை சார்ந்தே இயங்குவதாகவும், இரவில் விழித்திருப்பதால் மெலடோன் சுரப்பு குறைந்து, நாள்பட்ட சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுவதாக விளக்கினார்.

கண்ட நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிக்கும்; கழிவு வெளியேற்றமும் ரத்த சுத்திகரிப்பும் பாதிக்கிறது. இரவில் செரிமான மண்டலம் மந்தமாக இயங்கும். அப்போது கடினமான உணவை சாப்பிடாமல், மெல்லிய உணவுகளை சாப்பிடலாம். இல்லை என்றால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை அதிகரிக்கும். அது நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் சொன்னார்கள்.

ஏர்கண்டிஷன் செய்த கண்ணாடி கட்டடங்களில் 9–10 மணி நேரம் அசையாமல் அமர்ந்து பணியாற்றுவதால், வியர்வை வெளியேறும் துவாரங்கள் அடைபட்டு நச்சு உப்புகள் உடலிலேயே தங்கிவிடும். போதிய நீர்ச்சத்து இல்லாமலும், வியர்வை வெளியேறாமலும் யூரிக் அமிலம் தேங்குவது அதிகரிக்கும் என்றனர்.

தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்குவதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, ஒற்றைத் தலைவலி மற்றும் நரம்பியல் குறைபாடுகள் வரலாம். வெயில் படாமல் வாழ்வதால் ஏற்படும் வைட்டமின்- டி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.

இந்த பாதிப்புகளை பெருமளவு குறைக்கும் வழிகள் இருக்கின்றன.

பகலில் தூங்கும்போது அறை முழு இருட்டாக இருக்க வேண்டும். லைட் தொந்தரவு கூடாது. அறையின் உள்ளே அல்லது வெளியே தேவையில்லாத சத்தம் கேட்க கூடாது. அதை தடுக்க முடியாவிட்டால், காதுகளுக்கு ஒலி அடைப்பு பயன்படுத்தலாம்.

இரவுப் பணி பார்க்கும் போது அதிக காரம், எண்ணெய் உணவுகள் தவிர்க்க வேண்டும். அடிக்கடி காபி குடிக்க கூடாது. பகலில் வெயில் இருக்கும்போது குறைந்தது கால் மணி நேரமாவது உடலில் வெயில் படும் விதமாக நடக்கலாம்; அல்லது அமர்ந்து இருக்கலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்யலாம். இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் இரவுப்பணியால் உண்டாகும் உடல் பாதிப்புகளை குறைக்கலாம் என டாக்டர் சூரியநாராயணன் சொல்கிறார்.

மதுஸ்ரீ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us