/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சிறுதானிய உணவை உண்பவர் மட்டுமல்ல... திருமலர் செல்வியும் நலம்!
/
சிறுதானிய உணவை உண்பவர் மட்டுமல்ல... திருமலர் செல்வியும் நலம்!
சிறுதானிய உணவை உண்பவர் மட்டுமல்ல... திருமலர் செல்வியும் நலம்!
சிறுதானிய உணவை உண்பவர் மட்டுமல்ல... திருமலர் செல்வியும் நலம்!
ADDED : ஜூலை 05, 2025 11:47 PM

''வாழ்வில் சோதனைகளும், வலிகளும் வரும், அதை தைரியமாக எதிர்கொண்டு, கடினமாக உழைத்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிறார்,'' சுயதொழில் செய்து அசத்தி வரும் இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த திருமலர் செல்வி.
37 வயதான இவருக்கு திருமணமாகி, 2 மகள்கள் உள்ளனர். கணவர் கிருஷ்ணன் கூலித்தொழிலாளி. மூத்த மகள், இந்தாண்டு சித்த மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளார். இரண்டாம் மகள், பிளஸ் 2 படித்து வருகிறார்.
விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்தபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பொருளாதார ரீதியாக, மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, உதித்ததுதான் சிறுதானிய உணவு பொருள் தயாரிப்பு பிசினஸ் ஐடியா!
இறுதியாக, வேலைக்கு செல்லும்போது, ஒரு நாளுக்கு, 350 ரூபாய் கூலி கிடைத்தது. ஓராண்டுக்கு முன், அறுவை சிகிச்சை செய்த பின், கடினமான வேலைகள் செய்ய முடியவில்லை. வருமானம் குறைந்து, சிரமம் ஏற்பட்டது,''
''அப்புறம் என்ன செய்தீர்கள்?''
''அறுவை சிகிச்சை முடிந்த, 3 மாதத்திலேயே, மகளிர் திட்டம் வாயிலாக, மகளிர் சுய உதவி குழுவில் இணைந்தேன். சுயதொழில் புரிய வழிகாட்டி, சுய உதவி குழு மூலம் கடனுதவி பெறவும் உதவினார்கள்,''
''வீட்டிலேயே, சிறுதானியங்களை கொண்டு, சோளம் தோசை மிக்ஸ், பூங்கார் அரிசி கஞ்சி மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி மிக்ஸ், பீட்ரூட்மற்றும் வாழைப்பழம் மால்ட் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறேன். நல்ல லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி,''