/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
அறுபது தாண்டியும் தடகளம் தாண்டும் ராதாமணி
/
அறுபது தாண்டியும் தடகளம் தாண்டும் ராதாமணி
ADDED : அக் 20, 2024 12:01 PM

'வாழ்க்கையில் இலக்கை அடையும் வரை ஓட்டத்தை நிறுத்தாமல், வயது முதிர்விலும் தடை பல கடந்து, தடகளத்தில் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்' உடுமலைப்பேட்டையை சேர்ந்த 62 வயது தடகள வீராங்கனை ராதாமணி.
பள்ளி பருவம் முதல் விளையாட்டில், பல கோப்பைகளை வெல்ல துவங்கிய இவர் விளையாட்டுத்திறமையால், ஊர்க்காவல் படையில் 2003ல் சேர்ந்துள்ளார்.
பள்ளி பருவம் முடிந்த உடனே, அவருடைய விளையாட்டு ஆர்வத்துக்கும் இடைவெளி ஏற்பட்டது. ஊர்க்காவல் படையில் சேர்ந்த பின் மீண்டும் தன் தடகள திறன்களை வெளிப்படுத்தினார்.
மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் 150க்கும் அதிகமான சான்றிதழ், பதக்கங்களை பெற்று சாதனைகளை அடுக்கிக்கொண்டிருக்கிறார்.
குடும்ப சூழல், பொருளாதார நிலையில் பிரச்னைகளை சந்தித்தாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்கிறார். நவீனம், நாகரீகம் என பலரும் தங்கள் உடல் உழைப்பை இழந்து விட்ட நிலையில் இன்றும் சைக்கிள் ஓட்டுவதும், இயந்திரம் இல்லாமல் சமையல் செய்வதுமாக அன்றாட வாழ்க்கையை உடற்பயிற்சியாக கொண்டிருக்கிறார்.
தடகள வீராங்கனை ராதாமணி கூறியதாவது: விளையாட்டில் சர்வதேச அளவில் சாதிப்பதே என் இலக்கு. அதற்காக முயற்சி செய்து வருகிறேன். பலரும் என்னை பார்த்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்வருகின்றனர்.
பெண் குழந்தைகள் தங்களின் இலக்கை விட்டுக்கொடுக்க கூடாது. பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பெறும் சான்றிதழ்கள் பிற்காலத்தில் உதவும். டிசம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் ஆசியப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளேன். இலக்கை எட்டும் வரை எனது பயணம் தொடரும்.
இவ்வாறு கூறினார்.
வாழ்த்த 99423 98266ல் தொடர்பு கொள்ளலாம்.