/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
திறமையை நம்பினால் வெற்றி வந்து சேரும் சாதிக்கும் ஓவியர் ராமன்
/
திறமையை நம்பினால் வெற்றி வந்து சேரும் சாதிக்கும் ஓவியர் ராமன்
திறமையை நம்பினால் வெற்றி வந்து சேரும் சாதிக்கும் ஓவியர் ராமன்
திறமையை நம்பினால் வெற்றி வந்து சேரும் சாதிக்கும் ஓவியர் ராமன்
ADDED : ஏப் 21, 2024 11:04 AM

'செய்யும் தொழிலே தெய்வம்.- அந்தத்திறமைதான் நமது செல்வம்' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் வரிகளுக்கு ஏற்ப பிடித்த ஒன்றை தொழிலாக மாற்றி அதுவே தெய்வம், திறமையே செல்வம் என்ற வேட்கையோடு பென்சில் ஆர்ட், ஆயில் பெயிண்டிங் டிஜிட்டல் ஆர்ட் வரை அசத்தி வருகிறார் ஓவியர் ராமன்.
கேரளா பாலக்காடு அருகே கிராமத்திலிருந்து தற்போது சென்னை வாசியான ஓவியர் ராமன் சிறு வயதிலிருந்து ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஓவியத்தின் மீது காதல் இருந்தாலும், பொறியியல் பட்டதாரி, ஐ.டி., வேலை என வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். என்றாலும் சில காலங்களுக்கு பிறகு ஓவியம் மீதான காதல் அவரின் ஐ.டி., வேலையை விட வைத்தது.
குடும்பத்தின் ஒத்துழைப்போடு 3 மாத கால வேலையின்மைக்குபின் பின், திறமையை முழுமையாக ஓவியத்திலேயே செலுத்த, இது பின்னாளில் நல்ல வாழ்வை பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது தனியார் டிசைனிங் நிறுனத்தில் கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வரும் ராமன், வெளி நாட்டு பெரு நிறுவனங்களின் மருந்து பொருட்களின் டிசைனர், டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கான வகுப்பிற்காக வரையும் வரைபடத்தை டிஜிட்டல் ஆர்ட்டாக மாற்றுவது போன்ற பணிகளை செய்து வருகிறார். தவிர ஆயில் பெயிண்டிங், பென்சில் ஆர்ட், போர்ட்ரைட் எனத் தொடங்கி இன்றைய இணைய உலகின் டிஜிட்டல் ஆர்ட் வரை அசத்தி வருகிறார்.
இவரின் ஓவியங்கள் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம், உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைக்கின்றன. இவற்றை அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாக கொண்டு சேர்க்க வேண்டுமென பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ராமன் கூறுகையில், 'ஓவியம் வரையத் தெரியும் தானேதவிர, எப்படி செய்ய வேண்டும், அதற்கென கல்லுாரிகள், தனி வகுப்புகள் இருப்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. என் திறமையையும், கலையையும் நம்பினேன். அது என்னை கைவிடவில்லை. திறமையை நம்பினால் வெற்றி வந்து சேரும். பலருக்கும் என்னால் முடிந்ததை சொல்லி வழிகாட்டியாய் இருக்க நினைக்கிறேன்' என்கிறார்.
இவரை வாழ்த்த90432 96059

