/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நினைவுகளை பொக்கிஷமாக்க வந்தாச்சு 'ரெசின் ஆர்ட்'
/
நினைவுகளை பொக்கிஷமாக்க வந்தாச்சு 'ரெசின் ஆர்ட்'
ADDED : மார் 08, 2026 05:32 AM

வா ழ்வின் முக்கிய தருணங்களை, 'ரெசின் ஆர்ட்' மூலம், கலைப்பொருட்களாக மாற்றி தருகிறார், சாய்பாபா காலனியை சேர்ந்த சபரிகிரிஜா.
அதென்ன ரெசின் ஆர்ட்?
''ரெசின் என்பது ஒருவகை சிந்தடிக் பாலிமர். வளர்ந்த நாடுகளில், இந்த ரெசினை பயன்படுத்தி ஆர்ட் செய்கின்றனர்.
நீங்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமென நினைக்கும் பொருட்கள் மீது, இந்த ரெசின் கலவையை ஊற்றி, பதப்படுத்தும் போது, அவை உடையாமல் அப்படியே இருக்கும்,'' என்கிறார் சபரி கிரிஜா.
''இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...''
''எஸ்....இதில் கற்பனைத்திறனுக்கு ஏற்ப, நிறைய பொருட்களை உருவாக்கலாம். கீ செயின், கடிகாரம், திருமணத்தின் போது பயன்படுத்திய மாலை, தாலிக்கயிறு, புகைப்படத்தை பிரேமாக மாற்றுவது, நம்மை விட்டு பிரிந்தவர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பிரேமாக மாற்றுவது, குழந்தைகள் பயன்படுத்தியவை என, எதை வேண்டுமானாலும் பத்திரப்படுத்த முடியும்,''.
''சரி...எங்கே கற்றுக்கொள்வது?''
''நிறைய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. ஆர்வமிருந்தால் கற்கலாம். கற்பனைத்திறனும், தனித்துவமும் இருந்தால், 30-40 சதவீதம் வரை லாபம் பார்க்கலாம் என்று கட்டை விரல் உயர்த்துகிறார் சபரி!
-வித்யா

