கதைகளில் வெளிப்படுகிறது... மனித மனங்கள் பற்றிய ஆய்வு
கதைகளில் வெளிப்படுகிறது... மனித மனங்கள் பற்றிய ஆய்வு
UPDATED : ஜூன் 13, 2026 02:48 PM
ADDED : ஜூன் 13, 2026 02:10 PM

சி.சு.செல்லப்பாவின் 'வந்தே மாதரம்' என்ற சிறுகதை நுால் குறித்து, பேராசிரியர் சியாமளா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி சி.சு.செல்லப்பா. இவரது படைப்புகளை இன்றைய வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக, சிறுவாணி வாசகர் வட்டம் வந்தே மாதரம் என்ற இந்நுாலை வெளியிட்டுள்ளது.
இந்நுாலில் 13 சிறுகதைகள் உள்ளன. அனைத்துக் கதைகளும் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை தருபவை. குறிப்பாக ஞாபகம், வந்தே மாதரம், வாழ்க்கை, அர்த்தமற்ற கோபம் மற்றும் அறுபது ஆகிய கதைகள் என்னை கவர்ந்த கதைகள். இக்கதைகள், மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆழமாக ஆராய்கின்றன.
நினைவு என்பது உண்மையில் கடந்த காலத்தை நினைப்பதா? அல்லது இழந்துபோன ஒரு வாழ்க்கையை மீண்டும் வாழ முயல்கின்ற மனதின் போராட்டமா? இக்கேள்விகளுக்கான பதில் இக்கதையில் உள்ளது.
'வந்தே மாதரம்' கதை, தேசப்பற்று கதையாக மட்டும் இல்லாமல், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விரும்பும், ஒரு லட்சிய மனிதனின் மன உத்வேகத்தை சொல்லும் கதையாக உள்ளது. 'வாழ்க்கை' என்ற கதை, ஒரு சமூக அமைப்பின் மனநிலையை சொல்கிறது.
'அர்த்தமற்ற கோபம்' என்ற கதையில், கோபம் என்பது உணர்ச்சி அல்ல. அது பல நேரங்களில் மறைக்கப்பட்ட துக்கம். இயலாமையை, தோல்வியை ஏற்க முடியாதபோது, அந்த வலி கோபமாக வெளிப்படுகிறது. இந்த கதையில் செல்லப்பா கோபத்தைப் பற்றி எழுதவில்லை; கோபத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் பலவீனத்தை எழுதுகிறார்.
சி.சு.செல்லப்பா சமூக நிகழ்வுகளை கதைகளாக எழுதுவதில்லை. நினைவின் பின்னால் இருக்கும் குற்றவுணர்வை, தேசப்பற்றின் பின்னால் இருக்கும் தன்னல மறுப்பை, அதிகாரத்தின் பின்னால் இருக்கும் சமூக உளவியலை, கோபத்தின் பின்னால் இருக்கும் இயலாமையை, முதுமையின் பின்னால் இருக்கும் அடையாள நெருக்கடியை எழுதியிருக்கிறார்.
இதனால் அவரது கதைகள் ஒரு காலத்தைப் பற்றிய பதிவுகளாக மட்டும் இல்லாமல், மனித மனத்தைப் பற்றிய ஆய்வுகளாகவும் உள்ளன.
நினைவு என்பது உண்மையில் கடந்த காலத்தை நினைப்பதா? அல்லது இழந்துபோன ஒரு வாழ்க்கையை மீண்டும் வாழ முயல்கின்ற மனதின் போராட்டமா? இக்கேள்விகளுக்கான பதில் இக்கதையில் உள்ளது.
