தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/'மாண்புமிகு' மாணவர்களை உருவாக்கும் சக்சஸ் 'மந்திரா': சொல்கிறார் கல்வியாளர் அபிநாத் சந்திரன்

'மாண்புமிகு' மாணவர்களை உருவாக்கும் சக்சஸ் 'மந்திரா': சொல்கிறார் கல்வியாளர் அபிநாத் சந்திரன்

'மாண்புமிகு' மாணவர்களை உருவாக்கும் சக்சஸ் 'மந்திரா': சொல்கிறார் கல்வியாளர் அபிநாத் சந்திரன்


ADDED : மார் 22, 2026 09:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 09:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிந்தனையில் தெளிவு, செயலில் துணிவு, முடிவுகளில் வேகம், தீர்வு காண்பதில் விவேகம் என தனக்கான பன்முக திறமைகளால் மாணவர்கள் எதிர்காலத்தை வண்ணமயமாக்கி வருகிறார், மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக இயக்குநர் அபிநாத் சந்திரன்.

'மதிப்பெண்' கல்வியை தாண்டி அறம்சார்ந்த கற்றலும், மனித மதிப்பீடுகளை கற்பித்தலுமே கல்வி நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் எனக்கூறும் அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பேசிய தருணம்...

இன்றைய சூழலில் கல்வியை முடித்து சமூகத்திற்குள் நுழையும் 92 சதவீதம் பேருக்கு வேலைக்கு தகுந்த திறமை இல்லை. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையானவர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே உருவாகின்றனர். 2030ல் எந்த திறமையால் வேலை வாய்ப்பு உருவாகும் என்பதே தெரியாது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வு கூறுகிறது. எனவே தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு 'பாசிட்டிவ்' சிந்தனையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 'எண்ணம் போல் வாழ்வு' என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எண்ணங்கள் சரியாக இருந்தால் செயல்கள் நன்றாக அமையும், சுற்றமும் அமைதியாக மாறும்.

சமுதாயம் - பெற்றோர் - பள்ளி ஆகியன ஒரே நேர்கோட்டு சிந்தனையில் செயல்படும் சூழல் வேண்டும். மதிப்பெண் பெற்றுத் தரும் தொழிற்சாலைகளாக பள்ளிகளை பார்ப்பதை விட ஒழுக்கத்தை கற்றுத்தருகிறதா என பெற்றோர் பார்க்க வேண்டும்.

டாக்டர், பொறியாளராக வரவேண்டும் என்ற எண்ணங்களை ஏற்படுத்துவதில் இருந்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு 'தனித்துவம்' உள்ளது. அதிலும் சாதிக்க முடியும் என்பதை பள்ளிகள் உணர்த்த வேண்டும்.

வாழ்க்கையில் ஜெயிக்க நமக்கு 35 திறமைகள் வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. தலைமைப்பண்பு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தகவல் தொடர்பு, இலக்கை எட்டுதல் உட்பட அந்த 35 திறமைகளையும் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன.

பள்ளி மைதானத்தில் தான் பெரியவர்களை மதிக்கும் மனப்பான்மை, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் எண்ணம், சமூகப் பொறுப்பு, சாதிக்கும் மனநிலை என அத்தனை திறமைகளும் பொதிந்து கிடக்கின்றன. மதிப்பெண்களுக்காக மாணவர்களை வகுப்பறைக்குள் முடக்கி விடாமல் சிந்தனையை வளர்க்கும் விஷயங்களை கற்றுத்தருவதில் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவேண்டும். அப்போது தான் அப்துல் கலாம் கனவு போல் நாட்டிற்கு தேவையான 'மாண்புமிகு' மாணவர்களும், நல்ல தலைவர்களும் கிடைப்பார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை 'நியூ மெட்ரிக் பார் இன்டர்நேஷனல்' என்ற தலைப்பில் உலகில் 60 பள்ளிகளை தேர்வு செய்தது. அதில் இந்தியாவில் இருந்து இரண்டே பள்ளிகள் தேர்வாகின. அதில் ஒரே சி.பி.எஸ்.இ., பள்ளி மதுரை குயின் மீரா பள்ளி தான்.

'மைதானத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் திறமைகள்' குறித்த ஆய்வை பட்டியலிட்டு எங்களின் முயற்சியை பல்கலை அங்கீகரித்து கவுரவப்படுத்தியுள்ளது.

உலகில் எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் தேவைக்கேற்ற மாற்றத்தை கொண்டுவரும் திறமையுள்ள தலைவர்கள் தான் நமக்கு இப்போதைய தேவை. அதற்கான பயிற்சி அளிக்கும் மையங்களாக பள்ளி வளாகங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் வருங்காலத்தில் உருவாகும் என்கிறார்.

மதிப்பெண் பெற்றுத் தரும் தொழிற்சாலைகளாக பள்ளிகளை பார்ப்பதை விட ஒழுக்கத்தை கற்றுத்தருகிறதா என்பதை பெற்றோர் பார்க்க வேண்டும்.


இன்ஸ்டா: ABINATH_CHANDRAN

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us