தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/அழிந்து வரும் அரிய விலங்குகளுக்கு சுரேஷ் ராகவனின் கையால் கிடைக்கிறது உயிர்

அழிந்து வரும் அரிய விலங்குகளுக்கு சுரேஷ் ராகவனின் கையால் கிடைக்கிறது உயிர்

அழிந்து வரும் அரிய விலங்குகளுக்கு சுரேஷ் ராகவனின் கையால் கிடைக்கிறது உயிர்


UPDATED : நவ 22, 2026 10:42 AM

ADDED : நவ 21, 2026 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 10:42 AM ADDED : நவ 21, 2026 01:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களை ஓவியங்கள் வழியாக உயிர் கொடுத்து வருகிறேன்'' என்கிறார் ஓவியர் சுரேஷ் ராகவன்.

கோவை பீளமேட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், 'கட்டின் குரல்' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி நடக்கிறது.

இதில் அழிந்து வரும் அரிய வகை விலங்குகளின், 113 ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் வண்ணங்களால் மிகையாக அலங்காரப்படுத்தாமல், விலங்குகளின் இயல்பான தோற்றத்தில் வரையப்பட்டுள்ளன.

Image 1648823

ஒவ்வொரு ஓவியத்துக்கும் சிறிய விளக்க குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் விலங்கின் அறிவியல் பெயர், ஆங்கிலப்பெயர் மற்றும் தமிழ் பெயர் இடம்பெற்றுள்ளன.

அந்த விலங்கின் தன்மை, சுபாவம், இயல்பான தோற்றம், நிறம், அதன் வாழ்விடங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், ஆயுள் காலம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

Image 1648824

பல்லுயிர் பாதுகாப்பு குறித்து தனித்துவமான ஓவியங்களை வரைந்துள்ள ஓவியர் சுரேஷ் ராகவனிடம் பேசிய போது, தனது படைப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இயல்பாக வனவிலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். வன விலங்குகள் மற்றும் பறவைகளை கூர்ந்து கவனிப்பது, அவை குறித்த முழு விவரங்களை சேகரித்த பிறகு ஓவியங்களாக வரைவது என் இயல்பு.

இந்த கண்காட்சியில், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் அழிந்து வரும் அரிய வகை வன விலங்குகள் குறித்த 109 எனது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. ஓவியங்களின் தத்ரூபம், விலங்குகளுக்கு உயிர் தருகிறது.

Image 1648825

ஒவ்வொரு விலங்குகளை பற்றியும், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை துல்லியமாக கவனித்து கலை உணர்வுடன் சித்திரமாக்கி இருக்கிறேன்.

இங்கு இடம்பெற்றுள்ள பல விலங்குகள் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இந்தக் கண்காட்சியின் மூலம், இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் அவசரத் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என் நோக்கம்

Image 1648826

தாவரங்களும், காட்டு விலங்குகளும் இணைந்து வாழும் போதுதான் காடுகள் செழிப்பாக இருக்கும். ஆனால் காலநிலை மாற்றம், காடழிப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித ஆக்கிரமிப்பு ஆகியவை இந்த நுட்பமான சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

வன விலங்குகள்தான் காடுகளின் பாதுகாவலர்கள். அதனால் வன விலங்குகளை காப்பாற்றுவது நம் கடமையாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

…

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us