UPDATED : செப் 06, 2026 01:55 PM
ADDED : செப் 05, 2026 04:40 PM

இளைஞர்கள் மத்தியில் பாட்டரி ஆர்ட் (pottery art) பேசு பொருளாகியுள்ளது. பாரம்பரிய பானை தயாரிப்புக்கு புதிய உயிர் தருகிறார் ஸ்டுடியோ ஜென்கி போட்டர்(Genki potter) கவுஷிக்.
தனியார் துறையில் பணிபுரிந்தவர், கலையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், மகாராஷ்டிரா சென்று 4 மாதங்கள் வெஸ்டர்ன், செராமிக் பானைகள் செய்வதை கற்றுக்கொண்டார்.
இன்று சின்னியம்பாளையத்தில் ஸ்டுடியோவை துவங்கி ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்க துவங்கியுள்ளார்.
'மண்ணை தொடும் பொழுது மனசு அமைதியாகிறது' என்பதை மைய கருத்தாக வைத்துள்ளார் இவர்.
இக்கலையை கற்க ஐ.டி., வல்லுனர்கள் முதல் ஹோம் மேக்கர்ஸ் வரை பலரும் ஆர்வமாக வருகின்றனர்.
கவுசிக் கூறுகையில், ''இது வெறும் கலை மட்டுமில்லை. மனிதர்களை ஷோ லைப்க்கு திரும்ப அழைக்கும் ஒரு அனுபவம். மண்ணோடு வேலை செய்யும் பொழுது பேஷன், போக்கஸ், சந்தோஷம் அனைத்தும் கிடைக்கும். இக்கலையை இளம் தலைமுறையிடம் சேர்க்க வேண்டும்,'' என்றார்.
