sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

மஹா பெரியவர் மகிமை பேசும் ‛நம்ப ஆத்து பெரியவா'

/

மஹா பெரியவர் மகிமை பேசும் ‛நம்ப ஆத்து பெரியவா'

மஹா பெரியவர் மகிமை பேசும் ‛நம்ப ஆத்து பெரியவா'

மஹா பெரியவர் மகிமை பேசும் ‛நம்ப ஆத்து பெரியவா'


ADDED : மார் 16, 2025 12:35 PM

Google News

ADDED : மார் 16, 2025 12:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை கையால் புத்தகமாக எழுதியிருக்கிறோம். அந்த புத்தகத்தை அவரது அதிஷ்டானத்தில் வைத்து மறைமுக ஆசி பெற்று 2023 ஜூலையில் சேனல் ஆரம்பித்தோம். மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாறு, அவர் வாய்மொழியில் சொல்ல கேட்டு கணபதி என்பவர் எழுதிய 'தெய்வத்தின் குரல்' புத்தகத்தின் 7 தொகுதிகள், தெய்வத்தின் அருள்வாக்கு, பெரியவா பாடல்கள், பக்தர்களுக்கு செய்த அனுக்கிரகம், அதுகுறித்த அனுபவங்கள், காஞ்சி ஸ்ரீமடத்தில் தினமும் நடக்கும் ஆரத்தி, வைபவங்கள், அறிவோம் ஆன்மிகம், தர்மசந்தேகம், 500 ஸ்லோகங்களை 31 ஸ்லோகங்களாக சுருக்கி கொடுத்த மூகசாரம், சவுந்தர்யலஹரியை வீடியோவாக பதிவிட்டுள்ளோம்.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளோம். ராதாகல்யாணம், நாமசங்கீர்த்தனம், நவராத்திரி விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இளநகர் காஞ்சிநாதன் எழுதிய 3 புத்தகங்களை இந்த சேனல் மூலம் வெளியிட்டுள்ளோம். ஸ்ரீசனீஸ்வர மகாத்மியம் ஸ்லோகத்தை எழுத்தாளர் ரேவதி சங்கரனும், காஞ்சி மாமுனி வெண்பாவை பானுமதி கிருஷ்ணன் என்பவரும், சுதர்ஸனாஷ்டகம் (தமிழில் மொழிபெயர்ப்பு) பெங்களூருவைச் சேர்ந்த லலிதா கார்த்திக் பாடி கொடுத்து இசை வெளியீடு நடத்தியுள்ளோம்.

மஹாபெரியவரின் அனுகிரகத்தோடு ஓராண்டை கடந்துள்ளோம். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின் பேரில் மகான்களின் வாழ்க்கை வரலாறு தகவல்களை சேகரித்து வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். முதல் பகுதியாக ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் வரலாறு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உருவங்கள், படங்களுடன் இதுவரை 573 வீடியோக்கள் வெளியிட்டுள்ளோம்.

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ராமாயண பாடசாலையில் 13 மாணவர்களின் மாதாந்திர செலவுகளை சேனல் மூலம் பராமரிக்கிறோம். புதுச்சேரி ரோட்டில் பாலாறு பக்கத்தில் உள்ள பெரியவாபுரம் கோயில் வரலாற்றையும் ஒளிபரப்பி வருகிறோம்.

பிரார்த்தனை குழு ஒன்றை உருவாக்கி ஆன்மிக பணியாற்றுவது மனதிற்கு திருப்தி தருகிறது. பிரார்த்தனை, வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்க பக்தர்கள் வேண்டுதல் வைக்கின்றனர். அதையும் ஒளிபரப்பி வருகிறோம் என்றனர்.

மேலும் அறிய 97906 01226.






      Dinamalar
      Follow us