sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

மூலிகை வாசம்... நிறைஞ்சு வீசும்

/

மூலிகை வாசம்... நிறைஞ்சு வீசும்

மூலிகை வாசம்... நிறைஞ்சு வீசும்

மூலிகை வாசம்... நிறைஞ்சு வீசும்


ADDED : ஆக 11, 2024 11:41 AM

Google News

ADDED : ஆக 11, 2024 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளியில் மாணவர்களுக்கு நா மணக்க தமிழ் கற்றுத் தரும் மதுரை வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை சுபஸ்ரீ, வீட்டிலும் தோட்டத்திலும் மணம் கமழும் மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரிக்கிறார். நிலவேம்பு கஷாயம் தந்த தெம்பு தான் மூலிகைகளை நோக்கி மனதை திருப்பியதாக விவரிக்க ஆரம்பித்தார் சுபஸ்ரீ.

நாங்கள் பாரம்பரிய விவசாய குடும்பமாக இருந்தாலும் இரண்டு தலைமுறையாக ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா காலகட்டத்தில் மூலிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வீட்டில் இருக்க நேர்ந்த போது நிலவேம்பு கஷாயம் வீடுகள் தோறும் விநியோகிக்கப்பட்டது. காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்பட்டது.

ஒரு மூலிகைக்கே இவ்வளவு பயன் இருக்கிறதே என மற்ற மூலிகைகளை பற்றி தேட ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்தில் பசுமை படை ஒருங்கிணைப்பாளராக இருப் பதால் 3 ஆண்டுக்கு முன் 70 மூலிகைகளு டன் தோட்டம் உருவாக்கினேன். பூலாங்கு ளத்தில் உள்ள வீட்டில் 100 வகை மூலிகை வகைகளை தொட்டியில் வளர்த்து வந்தேன். சாதாரணமாக கிடைக்கும் மூலிகைச் செடி முதல் அழிந்து வரும் பட்டியலில் உள்ள மூலிகை இனங்களையும் தேடி கண்டறிந்தேன். அவற்றை வாங்குவது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தது. இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட மூலிகைகளை வாங்கினேன்.

வீட்டில் வளர்க்க இடமில்லை. ஏற்கனவே வீடு கட்ட நாட்டார்மங்கலம் கலைவாணி நகரில் வாங்கியிருந்த 50 சென்ட் இடத்தில் மூலிகை தோட்டம் உருவாக்கினேன். அடர்வனம் முறையில் அங்கு மூலிகைகள் வளர்கின்றன. கணவர் பாபுவும் நண்பர்களும் உறவினர்களும் மூலிகைகளை கொடுத்து உதவுகின்றனர்.

இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல மத்திய தர வயதுடையவர்களுக்கும் மூலிகைகள் பற்றிய புரிதல் இல்லை. தோட் டத்தில் கருடகால் சஞ்சீவி, சங்கு நாராயண சஞ்சீவி, கருமருது, நொச்சி, கருமஞ்சள், வெள்ளை துாதுவளை, செவ்வகத்தி, சதாவாரி எனும் தண்ணீர் விட்டான் கிழங்கு, வலம்புரி செடி, கடம்ப மரங்கள் வளர்கின்றன. 25 வகை சஞ்சீவி மூலிகைகளில் 10 வகைகள் இங்குள்ள இங்குள்ளன. சித்த மருத்துவத்தில் கரு மருது, கருஇஞ்சி, கருநொச்சி, கருநொச்சி, கருமஞ்சள் கருட மருத்துவ குணம் கொண்டது.

எல்லா மூலிகை செடிகளின் தாவரப் பெயர், பயன்களை தனித்தனியாக அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளேன். ஆராய்ச்சி மாணவர்களும் ஆர்வலர்களும் இலவசமாக பார்வையிடுகின்றனர். மூலிகைகளை தேடி அலைந்த போது சிலவற்றின் விலை அதிகமாக இருந்தது. என்னைப் போல மற்றவர்களும் விலையை பார்த்து வாங்காமல் போகக்கூடாது என் பதற்காக பதற்காக சில மூலிகைகளை உற்பத்தி செய்து வருகிறேன். தோட்டத்தை பார்த்து பரவசப்படும் இயற்கை, மூலிகை ஆர்வலர் களுக்கு மூலிகைக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறேன் என்றார்.

மூலிகை வாசம் வேண்டுமா: 94430 79008






      Dinamalar
      Follow us