sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

ஆயுள், ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது 'இக்கிக்காய்'

/

ஆயுள், ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது 'இக்கிக்காய்'

ஆயுள், ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது 'இக்கிக்காய்'

ஆயுள், ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது 'இக்கிக்காய்'

1


ADDED : அக் 26, 2025 02:49 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் சிலர் தாங்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்கள் அனுபவங்களை, இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், ஜப்பானிய எழுத்தாளர் ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ் மிரல்லெஸ் எழுதிய, 'இக்கிகாய்' (Ikigai) என்ற நுால் குறித்து, ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்நுாலை, பி.எஸ்.வி.குமாரசாமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இக்கிகாய் (Ikigai) என்ற இந்த நுாலை, தமிழ் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும். இக்கிகாய் என்பது ஜப்பானில் உள்ள ஒரு தீவு. இங்கு வாழும் மக்கள், 120 வயதுக்கு மேல் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்வியலை ஆய்வு செய்த போது, பல ஆச்சரியமான விஷயங்கள் தெரிய வருகின்றன.

ஒவ்வொருவரும் தினமும் அதிகாலையில் எழுந்து விடுகின்றனர். தங்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர். அளவாக சாப்பிடுகின்றனர். செய்யும் வேலையை உணர்வுபூர்வமாக செய்கின்றனர். இயற்கையுடன் இணைந்து வாழ்வதால், நோய் வருவதில்லை.

நமக்கு பிடித்தது என்ன என்பதை கண்டறிவது முக்கியம். அதுவே நமது வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருக்கும். உன் இயல்பான திறமை எது என்பதை அடையாளம் காண வேண்டும். அதையே வளர்க்க வேண்டும். சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் பயனளிக்கக் கூடிய நோக்கத்துடன் வாழ்வது, வாழ்வின் அர்த்தத்தை அதிகரிக்கும் என்கிறது இந்நுால்.

வேகமாக ஓடும் வாழ்க்கையிலிருந்து, நம்மை அமைதியான வாழ்வுக்கு மாற்றுதல், நீண்ட ஆயுள் வாழ வழிவகுக்கும். நல்ல நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, மனநலத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது என்கிறார் நுாலாசிரியர்.

அளவான உடற்பயிற்சியும், நல்ல பழக்கவழக்கங்களும் நீண்ட கால ஆரோக்கியத்தின் ரகசியங்களாகும். மன அழுத்தம் உடல், மன, தோல் ஆரோக்கியத்தைக் குறைப்பதால், அதனை குறைக்க வேண்டும் என, நூால் அறிவுறுத்துகிறது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், பயனுள்ள செயல்களில் ஈடுபட்டு, தன்னம்பிக்கையுடன் காலத்தை செலவிடுதல், வாழ்க்கையை முழுமையாக்கும் எனும் இந்த நுால், செய்யும் காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான மனநிலையும், தன்னம்பிக்கையும் இருந்தால், நாம் அடைய வேண்டிய இலக்கை சரியாக அடைய முடியும் என்கிறது.

நமக்கு தேவையானது உற்சாகமான மனநிலையும், மகிழ்ச்சியும்தான். அதை அடைவதற்கான உழைப்பும், நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேவையான திட்டமும் இருந்தால், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

'இக்கிகாய்' நுாலில், இவைதான் அடிப்படையான கருத்துக்கள். வாழ்க்கை நோக்கங்களை கண்டுபிடித்து, தினசரி வாழ்க்கையில் அதனை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை, இக்கிக்காய் சொல்லித்தருகிறது.

தொட்டுத்தொட்டு பார்த்தால் வெறும் காதிதம்; தொடர்ந்து படித்தால் இந்நுால் வெற்றிக்கான ஆயுதம்.

நமக்கு தேவையானது உற்சாகமான மனநிலையும், மகிழ்ச்சியும்தான். அதை அடைவதற்கான உழைப்பும், நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேவையான திட்டமும் இருந்தால், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.






      Dinamalar
      Follow us