/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம்
/
இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம்
இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம்
இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம்
ADDED : அக் 18, 2025 11:36 PM

'ந லம் நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆவல்...' இந்த குரலில்தான் என்னவொரு இனிமை!
'நிலவை கொண்டு வா... கட்டிலில் கட்டிவை, மேகம் கொண்டு வா... மெத்தை போட்டு வை...' இந்த பாடலை பாடும் போது, அந்த குரலில் அசாத்திய கம்பீரம் குடி கொண்டிருக்கும். இப்படி இரண்டு குரலுக்கும் சொந்தக்காரர்தான், பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம். சமீபத்தில் கோவை வந்திருந்த அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
இன்று பின்னணி பாடகர்களாக வரும் இளைஞர்கள், ஓரிரு படங்களிலேயே மாயமாகி விடுகின்றனர். பீல்டில் நிலைத்து நிற்க, அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு நாம் அறிவுரை வழங்க முடியாது. இன்று ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் வருகின்றன. அதில் இருந்து ஏராளமானோர் தேர்வாகின்றனர். ஆண்டுக்கு, 40 பேர் ஒரு நிகழ்ச்சியில் தேர்வாகின்றனர். அதில் வெற்றி பெறுபவர்கள் இருவரே. ஆனால் அத்தனை பேரும் திறமைசாலிகளே.
எ த்தனை பேருக்கு திரைபடங்கள் வாய்ப்பளிக்க முடியும். அதனால் தான் அவர்களால் அடுத்தடுத்த திரைப்படங்களில், வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் வெற்றி பெறலாம். சினிமா மட்டுமே தளம் அல்ல. அடுத்த தளங்களிலும் வெற்றி பெறலாம்.
கர்நாடக சங்கீதம் இன்றி, பிற இசைகள் இல்லை என்ற நிலைபாடு உள்ளது. கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன்; இதில் யார் எதை தேர்ந்தெடுத்தால் வெற்றி பெற முடியும்?
ஒவ்வொரு இசைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்தந்த இசைக்கு ஒரு தளம் உள்ளது. பல பாடல்கள் பாடிய பின்னரே, நாங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தோம். அந்த காலத்தில் டிஜிட்டல் மீடியாக்கள் இல்லை. இன்று டிஜிட்டல் உலகம் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் இசையாக பதிவு செய்யலாம். இன்று 'டிஜிட்டல் இன்ப்ளூயன்சர்ஸ்' இசைத் துறையில் அதிகம். உங்களுக்கு தனித்தன்மை ஒன்று இருந்து, தன்னம்பிக்கையுடன் இசையை உருவாக்கி அதை வெளியிடும் போது அது வெற்றி பெற்றால், உங்களை பின் தொடர லட்சக்கணக்கில் ஆட்கள் இருப்பர்.
இசைத்துறையில் சாதிக்க, இளம் தலைமுறையினர் செய்ய வேண்டியதென்ன?
இன்றைய இளம் தலைமுறையினருக்கு, நாம் ஏதுவும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஏராளமான தடைகள் உள்ளன. அதை உடைத்து வெளியே வர வேண்டும். அவர்களுக்கு சிறந்ததை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏராளமான விருப்பங்கள் இருந்தாலே, வாழ்க்கை சிக்கலாகத் தானே இருக்கும்.