/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஓயாமல் உழைத்து உயர வேண்டும்: தன்னம்பிக்கை தரும் தொழில் முனைவோர் திவ்யா
/
ஓயாமல் உழைத்து உயர வேண்டும்: தன்னம்பிக்கை தரும் தொழில் முனைவோர் திவ்யா
ஓயாமல் உழைத்து உயர வேண்டும்: தன்னம்பிக்கை தரும் தொழில் முனைவோர் திவ்யா
ஓயாமல் உழைத்து உயர வேண்டும்: தன்னம்பிக்கை தரும் தொழில் முனைவோர் திவ்யா
UPDATED : மே 19, 2024 10:14 AM
ADDED : மே 19, 2024 09:05 AM

கைகளால் நகைகள் செய்தல், மறு விற்பனை தொழிலில் உலகெங்கிலும் தன் வியாபாரத்தை பெருக்கி தொழில் முனைவோராக வலம் வருகிறார் திவ்யா.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். எம்.பி.ஏ., படித்துள்ளார்.
நகைகள் அணிவதை காட்டிலும் அதனை பார்ப்பதில் அதிக ஆசை கொண்டிருந்த திவ்யா வடிவமைப்புகள், நுணுக்கங்களை தேடத் தொடங்கியிருக்கிறார். அதுவே அவரை கைகளால் நகைகளை வடிவமைக்க துாண்டியிருக்கிறது. இது குறித்த பயிற்சி எடுத்து தனது கற்பனை, வடிவமைக்கும் திறனால் நுால், கண்ணாடிகள், உடலை குளிர்விக்கக் கூடிய பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு கைகளால் நகைகளை வடிவமைத்து வருகிறார். புதிய மாடல்களை உருவாக்கியிருக்கிறார். அது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அகேட் மணிகள், படிகம், பட்டு, காட்டன் நுால்கள் கண்ணாடி மணிகள் என வடிவமைப்புகளை உருவாக்கி வருகிறார்.
நகைகள், கல்யாண ஜூவல்லரி செட், நெக்லஸ், ஹிப்பெல்ட், தோடுகள், வளையல்கள் என இவரின் வடிவமைப்பில் உருவாகியுள்ளன.
![]() |
இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க கைகொடுக்கிறது இவர் செய்து வரும் ரீசெல்லிங் எனும் மறுவிற்பனை தொழில். வெளிநாடுகளிலும் இவரின் கைவினைப் பொருட்களுக்கும், மறு விற்பனை பொருட்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளித்து வருகிறார். தனக்கு வரும் ஆர்டர்களை பயிற்சியில் ஈடுபடுவோருக்கு கொடுத்து தன் தொழிலையும் மேருகேற்றி ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கிறார்.
![]() |
தன் வருமானத்தில் ஏழை குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்று வருகிறார். அன்று முதல் இன்று வரை தனி ஒரு ஆளாய் இவர் தான் முதலாளி, தொழிலாளி.
திவ்யா கூறியதாவது: எம்.பி.ஏ., படிக்கும்போது எதற்காக இந்த படிப்பை தேர்தெடுக்கிறீர்கள் என்றபோது நான் தொழில் முனைவோராக ஆகப்போகிறேன் என்று தெரிவித்தேன். பெண்களுக்கு சுயசம்பாத்தியம் கொடுக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் ஈடிணையற்றது. 7 நாடுகள் வரை என் நிறுவன தொழில் இருக்கிறது. உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதே கனவு. ஓயாமல் உழைத்து உயர வேண்டும். பெற்றோர், குழந்தைகள் அனைவருமே ஒத்துழைக்கின்றனர் என்றார்.
இவரை வாழ்த்த 78248 06008



