
லேகோஸ், நைஜீரியா: ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சட்திரத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை மேற் கொள்கிகின்றனர். இந்த ஆவணி அவிட்ட நாளில் தான் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர், அசுரர்கள் திருடிவந்த வேதத்தை மீட்டு வந்து அவற்றை புனிதப்படுத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த பூணூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு மற்றும் வேதங்கள் படிக்கும் முறையும் ஏற்பட்டது. எனவே இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. லேகோஸ் ஹிந்து மந்திர் ஃபவுண்டேஷன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூணூலை மாற்றும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. கோவில் குடமுழுக்கு வரும் ஞாயிறு, செப்டம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதன் வேலைகளும் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்
Advertisement