/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவில் இயலாத இந்தியர்களுக்காக யூனிட்டி கிளினிக் ஆஃப் டெக்ஸாஸ்!
/
அமெரிக்காவில் இயலாத இந்தியர்களுக்காக யூனிட்டி கிளினிக் ஆஃப் டெக்ஸாஸ்!
அமெரிக்காவில் இயலாத இந்தியர்களுக்காக யூனிட்டி கிளினிக் ஆஃப் டெக்ஸாஸ்!
அமெரிக்காவில் இயலாத இந்தியர்களுக்காக யூனிட்டி கிளினிக் ஆஃப் டெக்ஸாஸ்!
டிச 28, 2024

அமெரிக்கா பணக்கார நாடு என கருதப் பட்டாலும் இங்கே சாதாரண குடிமகன்களின் வாழ்வு என்பது சற்று கடினமானதே. அதிலும் மருத்துவ சிகிச்சை என்பது பெரும் செலவு. இதற்காக இன்ஷுரன்ஸ் இருந்தாலும் கூட எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை .
அமெரிக்காவிற்கு வரும்சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு வசதியில்லாமல் கஷ்டப்படும் இந்தியர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க கிளினிக் சேவை எண்ணமுள்ள இந்தியர்களால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது --யூனிட்டி ஆஃப் டெக்ஸாஸ் கிளினிக் .
யூனிட்டி கிளினிக் ஆஃப் டெக்சாஸ் ஒரு இலாப நோக்கற்ற கிளினிக். இது காப்பீடு இல்லாத மற்றும் காப்பீடு செய்யப்படாத குடும்பங்களுக்கு இலவச சுகாதார பராமரிப்பு மற்றும் பல் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
டாக்டர் சதீஷ் திருமலை,டாக்டர் லட்சுமி, டாக்டர் சௌமியா, சிவன், ஸ்ரீநி, ராஷ்மி போன்ற யூனிட்டி கிளினிக்கின் இயக்குநர்கள் குழு, கலிபோர்னியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் எடை இழப்பு சார்ந்த யூடுயூப் பிரபலம் டாக்டர் பாலுடன் இணைந்து சமூகத்திற்குச் சேவை செய்யத் தயாராக உள்ளது.
இது-வில்லியம்ஸன் கவுண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பின் தங்கிய நிலையிலுள்ள காப்பீடூ பெற்ற அல்லது பெறமுடியாத, பெறாத மக்களுக்கு விலையில்லா இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. அத்தோடு இவர்கள் உலகம் முழுவதும் பயணித்து மருத்துவம் , பல்மருத்துவம் சார்ந்த இலவச சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உடல் சார்ந்த மருத்துவச் செலவுகளும் பல்மருத்துவம் சார்ந்த செலவுகளும் மக்களுக்கு மிகுந்த சுமையை ஏற்படுத்தும் . அவசர உதவிக்கான அறைகளும்கூட, உயிருக்கு ஆபத்தற்ற மருத்துவ சேவைக்காக மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகின்றன.
இதையெல்லாம் சிந்தித்து, லியாண்டர் பகுதியில் , இவர்கள் நிறைய மருத்துவ மற்றும் பல்மருத்துவ முகாம்கள் இலவசமாக நடத்தி வருகிறார்கள்.
இந்த கிளினிக்கில் தன்னார்வ மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் பல துணைப்பணியாளர்கள் போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று.
மேல் விபரங்களை இந்த இணைப்பு மூலம் அறியலாம்.
www.unityclinioftx.org
- தினமலர் வாசகர் ஆர்.தினேஷ்குமார்