sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

டென்மார்க்கில் ஆப்பிள் திருவிழா

/

டென்மார்க்கில் ஆப்பிள் திருவிழா

டென்மார்க்கில் ஆப்பிள் திருவிழா

டென்மார்க்கில் ஆப்பிள் திருவிழா


அக் 18, 2025

Google News

அக் 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டென்மார்க்கின் ரம்மியமான ரோடிங் சிற்றூரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் 'ரோடிங் ஆப்பிள் திருவிழா' (Rødding Æblefestival) ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். இது டென்மார்க்கின் மிகப்பெரிய ஆப்பிள் திருவிழா என்றே கூறலாம்.


ஒவ்வோர் ஆண்டும் 41-வது வாரத்தில் நடைபெறும் இவ்விழா, ஆப்பிள் மற்றும் சைடர் (ஆப்பிள் மது) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பசுமைப் புரட்சி போன்ற முக்கியக் கருத்துகளையும் முன்னிறுத்துகிறது.


இத்திருவிழாவில் 110-க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகளைக் கண்டு ரசிப்பதோடு, சுவைத்தும் மகிழலாம். மேலும், பழச்சாறு பிழிதல், நிபுணர்களின் விரிவுரைகள், செய்முறைப் பட்டறைகள் எனப் பலதரப்பட்ட அனுபவங்களை இங்கு பெறமுடியும். இந்தத் தனித்துவமான விழா, டென்மார்க் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆப்பிள் பிரியர்களையும், துறைசார் வல்லுநர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது.


ரோடிங் நகரின் உள்ளூர் சங்கம் ஒன்று, நகருக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆப்பிள் மரங்களை நட்டு வளர்த்து, இந்த நகரின் பசுமைக்கும் பெருமைக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தச் சங்கமே ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது.


இத்தகைய சிறப்புமிக்க திருவிழாவில், இந்த ஆண்டு வெறும் பார்வையாளராக இல்லாமல், நானும் என் பங்களிப்பை அளிக்க விரும்பினேன். அதற்காக, விழாவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, என் தாயார் கற்றுத்தந்த சுவையான ஆப்பிள் சட்னியைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவெடுத்தேன்.


அதற்குக் கிடைத்த வரவேற்பு என் மனதை நெகிழச் செய்தது; நான் எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. பலரும் என் கடைக்கு வந்து சட்னியைச் சுவைத்தனர். அதன் தனித்துவமான சுவை தங்களைக் கவர்ந்ததாகக் கூறி, மீண்டும் தேவைப்பட்டால் அணுகுவதாகவும் தெரிவித்தனர். டேனிஷ் மக்களின் சுவைக்கு ஏற்றவாறு, சிறிதளவு மிளகாய் சேர்த்து, லேசான காரத்துடன் அதைத் தயாரித்திருந்தேன்!


என் அன்பையும் உழைப்பையும் கலந்து என் கையால் செய்த ஒன்றை இந்த உள்ளூர் சமூகத்துடன் பகிர்ந்து கொண்டது, எனக்கு மிகவும் நிறைவான ஓர் அனுபவமாக அமைந்தது.


இந்த 'ஆப்பிள் நகரின்' பாரம்பரியத்தையும் உயிர்ப்பையும் கொண்டாடியதன் மூலம், இந்த அற்புதமான நாட்டிற்கு என் நன்றியைச் செலுத்தியதாக உணர்கிறேன். இந்த நல்வாய்ப்பை அளித்த ரோடிங் நகரச் சங்கத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி!


இது தொடர்பான வீடியோ இணைப்பு:


https://youtube.com/shorts/TRVOE96a2g4?feature=share


- டென்மார்க்கிலிருந்து நமது வாசகி ஹேமா ராமச்சந்திரன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us