
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்ட் டு ஹார்ட் நிறுவனத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நார்வேயில் இசை பட்டறை நடத்தப்பட்டது. அதில் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களான காயத்திரி வெங்கடராகவனும், மிருதங்க வித்வான் ஈரோடு நாகராஜனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தாளம் மற்றும் இசை பற்றிய அமர்வு நடத்தி சிறப்பித்தனர். ஆர்ட் டு ஹார்ட் நிறுவனம் உமா ரங்கநாதனால் நார்வேயில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் கர்நாடக இசைப் பயிற்சி மற்றும் கர்நாடக இசை ரசனையை தூண்டுவதாகும்.
https://arttoheartinstitute.com/
- தினமலர் வாசகி ஆர்.சித்ரா சங்கரி (ஆர்ட் டு ஹார்ட் நிறுவனத்தின் சார்பாக)
Advertisement