
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் கிரிஞி மாநகரத்தில் பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை சார்பாக புரட்டாசி மாத கோவிந்தன் பூஜை நடைபெற்றது.
05.10.2024 சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பெருமாளுக்கு விஷ்ணுவின் சகஸ்ரநாமமும் அதைத்தொடர்ந்து, பஜனைகள், வசந்த மண்டப பூஜை உடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய குரல் திருமலை திருப்பதியில் இருந்தது போல் இருந்தது . பக்தர்கள் அனைவரும். இறைவனின் அருளோடும். பிரசாதம் உண்டு மகிழ்ச்சியாக இல்லம் திரும்பினார்.
இவ்விழாவிற்காக ஒத்துழைப்பு அளித்த அந்தணர், கோவில் நிர்வாகத்தினர், புதுத் தொண்டு செய்த பக்தர்கள், அந்நகரத்தின் மேரியில் உள்ளவர்கள். அனைவருக்கும். பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- நமது செய்தியாளர் ஹரே ராம் தியாகராஜன்
Advertisement