sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

ரெடிங்க் தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா

/

ரெடிங்க் தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா

ரெடிங்க் தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா

ரெடிங்க் தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா


மே 07, 2025

Google News

மே 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன் அருகே அமைந்துள்ள ரெடிங்க் நகரத்தின் ரெடிங்க் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது. விழாவானது ரெடிங்க் நகரத்தின் லோடன் கூடத்தில் (Loddon Hal), நண்பகல் பனிரெண்டு மணிக்குத் துவங்கி மாலை எட்டு மணி வரை நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக, தலைவாழை இலையில், விருந்தினர் அனைவருக்கும், தமிழ்நாட்டுப் பாரம்பரிய அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. ஐக்கிய அரசாங்கத்தின் பல பகுதிகளிலும் சென்னையிலும் பல கிளைகள் கொண்ட கிரிஸ்பி தோசா (Crispy Dosa) உணவகம், நாவூறும் இந்த அறுசுவை உணவினை வழங்கி, தமது நிறுவனத்தார் மூலமாக விருந்தினர் அனைவருக்கும் பரிமாறினர். நிறுவன உரிமையாளர்கள் மணிகண்டனும் ஜெயகுமாரும் ரெடிங்க்வாசிகள் என்பதால் உணவு வகைகளிலும் தரத்திலும் செலுத்தியிருந்த கூடுதல் கவனம், விருந்தினர்களுக்கு முழுமையான திருப்தியைக் கொடுத்தது.


இவ்விழாவிற்கு கிரிஸ்பி தோசாவுடன், 777 Hosting, VCP 11+, Lawyers Point UK, Triguna Country Homes, Tamilnadu மற்றும் Lifeline Mortgage and Insurance Services ஆகிய வர்த்தக நிறுவனங்கள் தமது ஆதரவுகளை வழங்கினர்.


ரெடிங்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சார்பாக அவரது மனைவியர் குத்துவிளக்கு ஏற்றி, தமிழ் மொழி வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. விழாவினை இனிதே துவக்க, நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஸ்ரீனிவாசனின் அறிமுகப் பேச்சோடு கலை நிகழ்ச்சிகள் துவங்கின. கலைநிகழ்ச்சிகளை, ஸ்ரீனிவாசனும் சோபனா கார்த்திக்கும் இணைந்து தொகுத்து வழங்கினர்.


குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மாதக்கணக்கில் ஒத்திகை பார்த்து மிகவும் தரமான நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு, நமது ரெடிங்க் தமிழர்களின் ஆரவாரமான வரவேற்புடன் மேடையேற்றினர். இவ்விழாவானது வெளிநாடுவாழ் தமிழர்களின் கலையார்வத்தை வெளிக்கொணரும் மேடையாக கலைஞர் மற்றும் கலந்து கொண்டோர் என்று அனைவருக்கும் கலைவிருந்தாக அமைந்தது.


விழாவில் இரு பகுதிகளாக நடனப் போட்டிகள் நடைபெற்றன. பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டு, அனைவரும் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிக் கொண்டு வந்தனர். போட்டிகளுக்கு நடுவர்களாக 'கீதா சராலயா'வின் மாணவியான 'மானஸா ப்(ஹ)ட் கடீல்' மற்றும் 'டாக்டர் பத்மா சுப்பிரமணியனின்' மாணவியான 'திருமதி ஜெனானிகா' மிகச் சிறப்பாகப் பங்காற்றி வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். இரு நடுவர்களுமே தத்தமது நடனங்களை மேடையேற்றி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.


போட்டியின் முடிவில் வெற்றியாளர்களாக, நடன நண்பீஸ் (ஸ்மிதா சுரேஷ் மற்றும் வீணா பாலாஜி), சதர்ன் ரிதம் (ஆத்யா, சஹானா மற்றும் ஸ்நேஹா) ஆகிய குழுக்கள், முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றினர். ஜொசிதா ராமலிங்கம் சிறப்பு பரிசு பெற்றார்.


நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக, ஒரு குறு கர்நாடக இசைக் கச்சேரியும் அரங்கேறியது. கச்சேரியில் ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசனின் பாடல், குரு பாலச்சந்தர் மிருதங்கம் மற்றும் குரு பாலு ரகுராமன் வயலின் இடம்பெற்று ரெடிங்கில் சித்திரையில் மார்கழியை நிகழ்த்திக் காட்டிய மாயமும் அரங்கேறியது. மூவரும் ரெடிங்க தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ரெடிங்கில் கர்நாடக இசை வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


மாலை எட்டு மணிக்கு ரெடிங்க் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான கணேசன் மற்றும் அவரது மனைவி ரூபா கணேசனின் நெகிழ்ச்சியான நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.


வீடு செல்லும் முன் பழைய மற்றும் புதிதாக இணைந்த நட்புகளுடன் குழந்தைகளும் பெரியவர்களும் தற்படங்கள் (selfies), படங்கள் மற்றும் ரீல்கள் என்று மேலும் சற்று நேரத்தை இன்பத்தோடு களித்து, பிரிந்து செல்ல மனமில்லாமல் தத்தமது வீடு சென்றனர். ரெடிங்க் தமிழ்ச்சங்கத்தின் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட அனுபவங்களை மகிழ்ச்சியோடு பல சமூக வலதளங்களிலும் பகிர்ந்து/ உரையாடி அந்த இனிமையான அனுபவங்கள் தந்த கிளர்ச்சிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கின்றனர், ரெடிங்க்வாசிகள்.


வருகை தந்து விழாவைச் சிறப்பித்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உதவி கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் RTS உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எழுதியவர்: ஸ்ரீனிவாசன் & கணேசன்


-- தினமலர் வாசகர் Ganesan Krishnamoorthy (Co-founder and Director of RTS)


https://readingtamilsangam.org/



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us