/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
கிரிஞியில் பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை சார்பாக ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா

செப் 09, 2024

பிரான்ஸ் கிரிஞிமாநகரில் பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை சார்பாக ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணியிலிருந்து விநாயகப் பெருமானுக்கு கணபதி ஹோமம் அபிஷேகம், அதைத்தொடர்ந்து பஜனைகள். வசந்த மண்டப பூஜையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிற்பகல் மாலை 6.30 மணிக்கு சுவாமி வீதி உலா நாதஸ்வரத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் அனைவரும் சிறுவர்களும் வேட்டி அணிந்து கொண்டு சுவாமியுடன் வலம் வந்தனர்.
இடையில் சிறப்பான சிதறுகாய் சமர்ப்பித்தல் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் இறைவனின் அருளோடும். பிரசாதம் உண்டு மகிழ்ச்சியாக இல்லம் திரும்பினார். விழாவிற்காக ஒத்துழைப்பு அளித்த அந்தணர்கள், கோவில் நிர்வாகத்தினர், புதுத் தொண்டு செய்த பக்தர்கள், உபயதாரர்கள், அந்நகரத்தின் மேரியில் உள்ளவர்கள். அனைவருக்கும். பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- நமது செய்தியாளர் ஹரேராம் தியாகராஜன்
Advertisement