/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தினம்
/
அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தினம்
அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தினம்
அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தினம்
நவ 14, 2024

அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று ஆன்லைன் ஓவிய போட்டி சிறப்பாக நடைபெற்றது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திறம்பட ஒருங்கிணைத்து, திட்டமிட்டு நடத்திய மென்பொறியாளர் ரமேஷ் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அல் அசா தமிழ் சங்க நிர்வாகிகள் செந்தில் வடிவேல், பொறியாளர் அசோக் பிரசன்னா, மான்விழி சுரேஷ், மருத்துவர் சூர்யா ரமேஷ் ஆகியோருக்கும் நன்றி.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டு, லஷித ஸ்ரீ காளிதாஸ், ஏ. பிரகதி, நிகில் நிரைய செல்வம், அதர்வ், இனாரா மெஹக், யாஷிகா, டெகலிசன் ஸ்ரீனிவாசன், தாட்சயிணி, கிரித்திகேஷ், ப்ரீத்தி, கீர்த்தி ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியின் தரத்தை உயர்த்தும் விதமாக King Faisal University, Al Ahsa, Saudi Arabia-வின் உயிரியல் மருத்துவப் பொறியியலில் உதவிப் பேராசிரியர் முனைவர் ப்ரீத்திகா இம்மாகுலேட் பிரிட்டோ மற்றும் சென்னை மருத்துவ நுண்ணுயிரியல் துறை ஆலோசகர் மற்றும் பேராசிரியர் மருத்துவர் லக்ஷ்மி பிரியா ஆகியோர் நடுவராக பணியாற்றினர். போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகளுக்கும், அவர்களை உற்சாகமூட்டி பங்கேற்கச் செய்த பெற்றோர்களுக்கும் அமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
- தினமலர் வாசகர் செந்தில் வடிவேல் பழனிச்சாமி
Advertisement