/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டுக்கு செல்லும் பிரதிநிதிகளுடன் கத்தாரில் இந்திய தூதர் சந்திப்பு

டிச 26, 2024

தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் உள்ள இந்திய கலாச்சார மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டுக்கு செல்லும் பிரதிநிதிகளுடன் இந்திய தூதர் விபுல் சந்திப்பு மேற்கொண்டார்.
அப்போது அவர் புவனேஸ்வர் நகரில் வரும் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவையனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என இந்திய தூதர் உறுதியளித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement