தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/திறனாய்வு அரங்கு

திறனாய்வு அரங்கு

திறனாய்வு அரங்கு


பிப் 23, 2026

Google News

பிப் 23, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கைக்குரிய ஷைகு நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் அலி மௌலானா நாயகம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான தமிழ் சங்கம் சார்பில், மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் இயற்றிய “பாத்திமா நாயகியார் மாலை”, “பாலைவனம்”, “குறிஞ்சி சுவை”, “இறையருட்பா”, “உமர் (ரலி) புராணம்” உள்ளிட்ட அனைத்து தமிழ் நூல்களையும் மையமாகக் கொண்டு திறனாய்வு அரங்கு மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை 20.02.2026 அல்டிமேட் உணவகத்தின் அரங்கம் தோஹா கத்தாரில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு அஸ்ஸெய்யித் அப்துல் ஹை மௌலானா தலைமை தாங்கினார். பல மௌலானாக்கள் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர் சிறப்புரையாற்றினார், கத்தாரில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியை கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான தமிழ் சங்கம் சார்பாக ப. அப்துல் வஹ்ஹாப், அர்ஷாத் மற்றும் குழு ஏற்பாடு செய்திருந்தது. அஸ்ஸெய்யித் முஃபீல் மௌலானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில், பங்கேற்பாளர்களுக்கு இஃப்தார் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு, நிகழ்வு ஆன்மிக மற்றும் இலக்கிய உற்சாகத்துடன் நிறைவுற்றது.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us