/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஈராக்கில் மாணவ, மாணவியரை கவர்ந்து வரும் நடமாடும் நூலகம்
/
ஈராக்கில் மாணவ, மாணவியரை கவர்ந்து வரும் நடமாடும் நூலகம்
ஈராக்கில் மாணவ, மாணவியரை கவர்ந்து வரும் நடமாடும் நூலகம்
ஈராக்கில் மாணவ, மாணவியரை கவர்ந்து வரும் நடமாடும் நூலகம்
டிச 31, 2024

பாக்தாத்: ஈராக் நாட்டில் மாணவ, மாணவியரை கவர்ந்து வரும் வகையில் நடமாடும் நூலகம் செயல்பட்டு வருகிறது. ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக மொசுல் நகரம் உள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் மாணவ, மாணவியர் மத்தியில் படிக்கும் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை போக்கும் வகையில் ஜெர்மனி நாட்டின் ஒத்துழைப்புடன் நடமாடும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நூலகம் ஒவ்வொரு கல்வி நிலையங்களின் அருகிலும் சென்று முகாமிட்டு வருகிறது. அந்த கல்வி நிலைய மாணவ, மாணவியர் இதனை படிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் அரபி மொழியில் இலக்கியம், வரலாறு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்பான அரபி மொழி நூல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதனை மாணவர்கள் படித்து பயனடைந்து வருகின்றனர்.
நாட்டில் எத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் வாசிப்பு தங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த முயற்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement