/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
தமிழ் செய்தி இணையங்கள்
/
அருவி இதழ் - கோடை மலர் 2024
/
அருவி இதழ் - கோடை மலர் 2024

நீல வானத்தில் செம்பொன்னாய் கதிரவன் தகதகக்க, பூமிப் பந்தின் மீது பதித்த மரகதமாய் அழகூட்டும் மரங்களும், சிதறிக் கிடக்கும் வானவில்லின் துண்டுகளாய் புது வண்ணம் காட்டும் மலர்கள் அடர்ந்த சோலைகளும், வீசும் காற்றினில் மதுர கீதமாய் சுருதி கூட்டும் புள்ளினங்களின் இன்னிசையும் நிறைந்த கோடை பருவத்தில், மேலைக் காற்று உங்கள் கரங்களில் சேர்ப்பித்த நறுமலரே அருவி இதழின் கோடை மலர். கவிஞர் நா. முத்துநிலவன் மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை, 37ஆவது பேரவை விழா செய்திகள், தமிழ்ச் சங்க செய்திகள் எனப் பலவும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.
அருவி இதழ் சிறப்பாக வெளிவர அயராது உழைக்கும் தன்னார்வலர்கள் மற்றும் அருவி இதழுக்காகத் தொடர்ந்து படைப்புக்களை அளித்து வரும் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள். அருவி இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்களை
aruvimalar@fetna.org
என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிரலாம்.
சான் ஆண்டோனியோ, டெக்சாசில் நடைபெற இருக்கும் பேரவையின் 37ஆவது தமிழ் விழாவில் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.
https://fetna.org/aruvi-kodai- malar-2024
- அருவி மலர்க் குழு
Advertisement

