/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
கனடிய தமிழர்கள் கொண்டாடிய தீபத்திருவிழா
/
கனடிய தமிழர்கள் கொண்டாடிய தீபத்திருவிழா
டிச 03, 2025

இந்தியநாடு முழுக்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆரவாரமுடனும் ஒர் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தீபாவளி என்றால் மறுப்பதிற்கில்லை. இன்று உலகம் முழுக்க தமது உழைப்பாலும் கல்வி அறிவினாலும் தமிழர்கள் கால் பதிக்காத இடம் ஒன்று உண்டா? கனடிய மண்ணில் இன்று வளர்ந்து வரும் பல சமூகங்களில் தனக்கென ஓரிடத்தை தமிழர்கள் தமது கடைம் உழைப்பால் உருவாக்கியுள்ளனர்.
அதன் சாட்சியாக தமிழ்நாடு கலாச்சார சங்கம் ஏறக்குறைய 28 வருடங்களாக சிறப்பாய் கலாச்சாரம், தொன்மை, பண்பாடு, கலைகளுடன் தேனான தமிழை போற்றி வருவதோடுமட்டுமல்லாமல் இம்முறை மிக பிரமாண்டமாக IKON EVENT SPACE மிஸிஸாகாவில் 500 முதல் 600 உறுப்பினர்கள் குடும்பத்துடன் கொண்டாடிய இந்நிகழ்வு இதயத்தில் என்றும் பசுமரத்தாணியாக இருக்கும் எனலாம். முத்தமிழ் பாடசாலை, யோகா, சிலம்பம் என மன்றத்தில் ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமின்றி இதுபோன்ற பண்டிகை கொண்டாடங்கள் உறவுகளையும் நட்பையும் இணைக்கும் பாலமாக திகழ்கிறது.
29 நவம்பர் மாலை தீபாவளி நிகழ்வு தமிழ்நாடு கலாச்சார பெண் இயக்குனர்கள் ரேச்சல் டேனியல், மாரி முத்தரசன், ப்ருந்தா, ப்ரியா வடிவேல், அம்ருத்தவர்ஷ்னி, நந்தினி செந்தில்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சங்கத்தின் தலைவர் ஆனந்த்பாபு குருசாமி அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு தமிழர்களுக்கு மெய்ப்படவேண்டும் என்று வாழ்த்தினார். விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் க்ரிஸ்டினா, ஆன் ராபர்ட், மிச்சல் மா, டான் முய்ஸ், இந்திய வம்சாவழி தீபிகா டாமெரெல்லா கவுன்சிலர், மோனிகா கோஸ்ரேகர் (இந்திய கான்சுலேட்)என முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து வாழ்த்தையும் வழங்கினர்.
சங்கத்தின் விழாமலரில் கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு வாழ்த்துச்செய்திகளை இந்திய வம்சாவழி கனடிய தமிழர்களுக்கு பகிர்ந்தனர். விழாவில் பல கலைகொண்டாடங்கள் மெகா ட்யூனர்ஸின் இன்னிசை நிகழ்ச்சி நல்லிரவு 12 மணிவரை நீடித்தது. தமிழக திரையிசை பாடகி ஷர்மிளா கணேஷ், சாம், ராஜ் கணேஷ் என பல பாடகர்கள் அமர்க்களமாக பாடினார்கள். நிகழ்வை ஐஸ்வர்யா ரவிசங்கர் சிறப்பாய் தொகுத்து வழங்கினார். வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர்களின் அமைப்பும் (நடவு) மற்ற அனுசரனையாளர்களும் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- கனடாவிலிருந்து நமது செய்தியாளர் சுதர்சன்
Advertisement

