/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டிகள்- சார்லட், வடகரோலினா
/
தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டிகள்- சார்லட், வடகரோலினா
தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டிகள்- சார்லட், வடகரோலினா
தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டிகள்- சார்லட், வடகரோலினா
ஆக 30, 2024

அமெரிக்காவில், வடகரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் நகரில் பிராந்திய அளவிலான தற்காப்பு கலைகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியை முன் நின்று நடத்தியதின் மூலம் அமெரிக்காவில் தற்காப்புக் கலைகள் போட்டியை நடத்தும் முதல் தமிழர் என்ற பெருமையை குயின் சிட்டி ஏடிஏ தற்காப்புக் கலையின் அகாடமி உரிமையாளர் சங்கரன் ஜெயக்குமரன் பெற்றார்.
2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த தற்காப்புக் கலை அகாடமியில் இருந்து பல மாநில சாம்பியன்களை உருவாக்கிய பெருமை சங்கரன் ஜெயக்குமரனைச் சேரும் என்றால் அது மிகையாகாது.
அமெரிக்காவில் தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக சார்லோட், வடகரோலினா தி பார்க் & எக்ஸ்போ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் 10 மாகாணங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கிராண்ட் மாஸ்டர் எம்.கே. லீ, 9வது பட்டம் பிளாக் பெல்ட் மற்றும் விருந்தினர்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து முதுநிலை, மூத்த முதுநிலை மற்றும் தலைமை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பல சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற வாழ்த்துகள்!
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement