sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!

/

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!


செப் 08, 2024

Google News

செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 7-ஆம் நாள் சனிக்கிழமை தலைநகரின் பெரும்பாலான சாலைகள் வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டு சைக்கிள் ஒட்டிகளுக்காக அனுமதிக்கப்பட்டது. Dcசைக்கிள் ரைட் என்ற கொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் இந்த 20 மைல்கள் சைக்கிள் ஓட்ட நிகழ்வை நடத்துகிறார்கள். நாட்டின் தலைநகரை சைக்கிள் ஒட்டிகளுக்காகத் தனித்துவமாக அனுமதிப்பதன் மூலம் சைக்கிள் ஓட்டுதலின் மகிழ்ச்சியை மக்கள் கொண்டாட வழிவகுத்தது.

இந்நிகழ்வின்போது, வாசிங்டன் டி.சி.யின் பல தெருக்கள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, அனைத்து வயதினருக்கும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதுகாப்பான எந்த இடையூறும் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் சைக்கிள் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது. யு.எஸ். கேபிடல் கட்டிடம், வாசிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் மெமோரியல், பொட்டோமேக் நதி போன்ற புகழ்பெற்ற அடையாளங்களின் அற்புதமான காட்சிகளை இந்தப் பாதையில் சைக்கிள் ஓட்டிகள் கண்டு களித்தனர்.


முக்கிய சாலைகளை மூடுவதன் மூலம், வழக்கமான போக்குவரத்து நெருக்கடி கவலைகள் இல்லாமல் தலைநகரின் அழகைப் பார்த்தவாறு ஒரு சுவாரஸ்யமான மன அழுத்தமில்லாத இன்பச் சூழலை இந்த நிகழ்வு உருவாக்கியது. இந்த ஓட்ட நிகழ்வு என்பது ஒரு சைக்கிள் பந்தயம் அல்ல, இது சாதாரணமாகச் சைக்கிள் ஓட்டுபவர்கள் முதல் தேர்ந்த சைக்கிள் ஓட்டும் வல்லுநர்கள்வரை பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு குடும்ப நட்பு மனநிறைவு சைக்கிள் ஓட்டமாகும்.


இது சுமார் 20 மைல்கள் வரை தலைநகரின் பெரும்பாலான சாலைகளையும் மேம்பாலங்களையும் சைக்கிளில் கடந்து செல்லக்கூடிய ஒரு அறிய வாய்ப்பாகும். குழந்தைகள், குடும்பங்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் இது செயல்படுத்தப்பட்டது. மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழவும், சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கவும், சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் நடத்தப்படுகின்றன.


இந்த நிகழ்வில் இந்தியர்களால் நிறுவப்பட்டுச் செயல்படும் “Fun Cycle Riders (https://funclerides.org) சைக்கிள் ஒட்டிகளும் கலந்து கொண்டனர். மேலும், Fun Cycle Riders அமைப்பு செப்டம்பர் 22-ஆம் நாளன்று பென்சில்வேனியா மாகாணத்தில் சைக்கிள் விழிப்புணர்வு பாதுகாப்பு முகாம் நடத்தவும், செப்டம்பர் 29-ஆம் நாளன்று நியூஜெர்ஸி மாகாணத்தில் அங்குள்ள தொண்டு நிறுவனத்தோடு இணைந்து அனைவருக்குமான சைக்கிள் ஓட்டம் நடத்தி மக்களிடையே சைக்கிள் விழிப்புணர்வையும் அதன் அவசியத்தையும் பரப்பும் விதமாக நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளது. அனைவரும் சைக்கிள் ஓட்டுவோம் புத்துணர்வு பெறுவோம்!


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us