/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
தமிழ் செய்தி இணையங்கள்
/
அருவி பனிமலர் இதழ், டிசம்பர் 2023
/
அருவி பனிமலர் இதழ், டிசம்பர் 2023

மேகத் தாரைகள் வாடைக் காற்றுடன் கைக்குலுக்கி, பளீரென ஒளி வீசும் வைர மணிகளாக உருக்கொண்டு , வெண்பனியாய் நிலமெங்கும் விரவிக் கிடக்கும் பின்பனிக் காலத்தில் உங்கள் கரங்களில் தவழ வந்திருக்கிறது அருவி பனிமலர் இதழ். 37-வது பேரவை விழா செய்திகள், சிறுகதை, பயணக் கட்டுரை, கவிதைகள் எனப் பலவும் இவ்விதழை அலங்கரிக்கின்றன. 36-வது பேரவை விழாவில் அரும்பங்காற்றிய தன்னார்வலர்களுக்கான நன்றி நவிலல் விழா புகைப்படங்களும், அருவி குறுங்கதைப் போட்டிக்கான விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
அருவி இதழ் பொலிவுடன் வெளிவரப் பின்னின்று அரும்பணியாற்றும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். அருவி குறித்த பின்னூட்டங்களை aruvimalar@fetna.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிரலாம். மீண்டும் அடுத்த அருவி இதழில் சந்திப்போம்.
https://fetna.org/aruvi-pani-malar-december-2023/
நன்றி
அருவி மலர்க் குழு - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
Advertisement

