sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

பார்மிங்டன் நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிராணப்ரதிஷ்டை

/

பார்மிங்டன் நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிராணப்ரதிஷ்டை

பார்மிங்டன் நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிராணப்ரதிஷ்டை

பார்மிங்டன் நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிராணப்ரதிஷ்டை


ஜூன் 11, 2025

Google News

ஜூன் 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெட்ராய்ட், மிச்சிகன்: மிச்சிகனின் பார்மிங்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிராணப்ரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடை பெற்றது.


6 ஆம் தேதி காலை மஹாகணபதி பூசை ,புண்யாஹவசனம் என தொடங்கி அன்று மாலை சமூஹிக லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் விமரிசையாக நிகழ்ந்தது. 7 ஆம் தேதி காலை ஏகாதச ருத்ர ஹோமம் மற்றும் வேல் மாறல் பாராயணத்தில் பல பக்தர்கள் கலந்து கொண்டு தமது பக்தியையும் அன்பினையும் வெளிப்படுத்தினர். அன்று மாலை சுப்பிரமணிய சுவாமி மூல மந்த்ர ஹோமமும் சயனா திவாசமும் நடைபெற்றன.


8ஆம் தேதியன்று மஹாபூர்ணாஹுதியும் கும்பாபிஷேகமும் நடைபெற்றன. ஓம் சரவணபவ என்ற பக்தகோஷம் அறங்கெங்கும் ஒலித்தது பரவசத்தை உண்டாக்கியது. மாலை வள்ளி தேவசேனா திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சூழ சீரும் சிறப்புமாக அரங்கேறியது.


பார்மிங்டன் நகரத்தின் மேயர் ஜோ லா ருஸ்ஸா, ப்ரோ-டேர்ம் மேயர் ஜான்னா பால்க், பார்மிங்டன் ஹில்ஸ் நகர மேயர் தெரசா ரிச் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி விழாவை கெளரவித்தனர் . இவர்களை இந்திய சம்பிரதாயத்தின்படி வரவேற்று கெளரவித்தார் கோவிலின் முக்கிய நிர்வாகி மற்றும் அர்ச்சகர் ஹர்ஷ் வரதன்.


கொலம்பஸ் நகரில் பணிபுரியும் சிவகார்திக் குருக்கள் தலைமையில் இதர அர்ச்சகர்கள் ஸ்ரீதர் ஷர்மா, சிவா கோவிலின் நிர்வாகி மற்றும் தலைமை அர்ச்சகர் ஹர்ஷ் வரதன் ஆகியோர் மிக சிரத்தையுடன் அனைத்து மந்திரங்களும் ஜெபங்களும் செய்து விழாவை ஆகம சாஸ்திரப்படி ஆச்சார அனுஷ்டானங்களுடன் விமரிசையாக செய்தனர்.


செண்டை மேளம் முழங்க,குழந்தைகள் நடனமாட, டெட்ராய்ட் திருப்புகழ் அன்பர்கள் குழுவின் இனிமையான திருப்புகழ் பஜனையுடன் விழா இனிதே முடிந்தேறியது.


- தினமலர் வாசகி காந்தி சுந்தர்


https://www.facebook.com/share/v/1C7GjV3oR3/?mibextid=wwXIfr



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us