/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சதுரங்க விளையாட்டில் அசத்தும் சிறார்கள்
/
சதுரங்க விளையாட்டில் அசத்தும் சிறார்கள்
UPDATED : பிப் 04, 2025 09:13 PM
ADDED : ஜன 30, 2025 08:45 PM

உத்தரகன்னடாவின் கிராமம் ஒன்றில், அனைத்து வீட்டிலும் சதுரங்க விளையாட்டில் திறன் கொண்ட சிறார்கள் உள்ளனர். பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று, பரிசை தட்டி செல்கின்றனர்.
உத்தரகன்னடா, முன்டகோடில் சுள்ளள்ளி என்ற குக்கிராமம் உள்ளது.
இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
கிராமத்தின் அரசு பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான 39 மாணவ - மாணவியர் உள்ளனர். நான்கு ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்த 2016ல் நாராயண கூடகோடி, ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது முயற்சியால், சுள்ளள்ளி கிராமம் சதுரங்க விளையாட்டு கிராமமாக மாறியுள்ளது.
பள்ளி மாணவர்களை சதுரங்க விளையாட்டில் ஊக்கப்படுத்தினார். பயிற்சியாளர்களையும் ஏற்பாடு செய்தார்.
இதன் பயனாக இங்குள்ள ஒவ்வொரு மாணவ - மாணவியரும் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். இதனால் கிராமம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரும் நாட்களில் கிராமத்தில் ஒவ்வொருவரும், சதுரங்க விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெற்றோரும், படிப்புடன், சதுரங்க விளையாட்டிலும் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகின்றனர்.
- நமது நிருபர் -