PUBLISHED ON : ஜன 22, 2026 07:44 AM

1. மனச்சோர்வு உள்ளோர், நைட்ரஸ் ஆக்சைடு என்ற 'சிரிப்பு வாயு'வைச் சுவாசித்தால், சில மணி நேரத்திற்கு அறிகுறிகள் குறைகின்றன என ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டறிந்துள்ளது. தொடர்ச்சியான சிகிச்சையின் மூலம் நீண்டகால மனநல மாற்றங்களை இது உருவாக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
![]() |
2. ஜப்பானிய விஞ்ஞானிகள் செயற்கைத் தோல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதை தோலில் பதித்துவிட்டால் போதும். ரத்தத்தில் நோய் அறிகு றிகள் தென்பட்டால், இந்த செயற்கைத் தோல் பச்சை நிறத்தில் ஒளிரும். இது உடலுக்குள்ளேயே இருந்து தொடர்ந்து உடல்நிலையைக் கண்காணிக்கும் 'உயிரி உணரியாக' (பயோசென்சார்) செயல்படுகிறது.
![]() |
3. பகல்நேரச் சூரிய ஒளி, நம்மைச் சுறு சுறுப்பாக்குவதுடன், மூளையின் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. மான்செஸ்டர் பல்கலை ஆய்வின்படி, போதிய சூரிய வெளிச்சம் மூளையைத் துாண்டி, பகல்நேர உறக்க உணர்வைக் குறைப்பதோடு, செயல்திறனை மேம்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது.
![]() |
4. உடற்பயிற்சி, தசை முதுமையைத் தள்ளிப்போடுமா? முடியும் என்கின்றனர் சிங்கப்பூர் ஆய்வாளர்கள். உடற்பயிற்சி செய்வதா ல், தசை மூப்பி னை தூ ண்டும் மரபணு செல்லின் செயல்பாடு மந்தமடைகிறது. சேதமடைந்த புரதங்களை நீக்கி, திசுக்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது. இதனால் முது மையிலும் தசைகள் வலிமையாக இருக்க உதவுகிறது.
![]() |
5. மின்சார வாகன பேட்டரிகள் ஆண்டுக்குச் சராசரியாக 2.3 சதவீதம் மட்டுமே திறனை இழக்கின்றன . இதன்படி, 13 ஆண்டு களுக்குப் பிறகும் 75 ச தவீத பேட்டரி ஆயுள் நீடிக்கும் என 'ஜியோடேப்' நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது . இது மின்வாகனங்கள், நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உகந்தவை என்பதை உறுதிப்படுத்தியுள்ள து.





