தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/தீபாவளி மலர்/ஐயப்பனுக்கு ஒரு பிளாக் பெல்ட் மேல்சாந்தி

ஐயப்பனுக்கு ஒரு பிளாக் பெல்ட் மேல்சாந்தி

ஐயப்பனுக்கு ஒரு பிளாக் பெல்ட் மேல்சாந்தி


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சபரிமலை மேல்சாந்தி பதவி கிடைக்க வேண்டும் என்றால் கல்வி, சாஸ்திர ஞானம் மட்டும் இருந்தால் போதாதது. கூடவே சுவாமி ஐயப்பன் அருளும் வேண்டும். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, சபரிமலை சன்னதியில் ஐயப்பனின் முன்பு குலுக்கல் நடக்கும் போது தேர்வாக ஐயப்பன் அருளும் கிடைக்க வேண்டும்… அதுதான் சபரிமலை மேல்சாந்தியின் மாறுபட்ட முக்கியத்துவம்.

வரும் கார்த்திகை முதல் தேதி முதல் ஓராண்டு சபரிமலையில் தங்கி, ஐயப்பனுக்கு பூஜை செய்யும் பாக்கியசாலியாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் திருவனந்தபுரத்தில் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பழவங்காடி கணபதி கோவில் மேல்சாந்தி.

புதுடில்லி ஐயப்பன் கோயில், திருவனந்தபுரம் தைக்காடு சாஸ்தாகோயில்களில் பூஜாரியாக பணியாற்றிய போது தொடர்ந்து சபரிமலை மேல்சாந்திக்கு விண்ணப்பித்தார். மூன்று முறை இறுதி பட்டியலிலும் இடம் பெற்றார். ஆனால் குலுக்கலில் கிடைக்கவில்லை.

சபரிமலை மேல்சாந்தி என்ற லட்சிய பயணத்தில் ஏதோ தடங்கல்கள் இருப்பது போல் உணர்ந்த போதுதான் அவருக்கு, பழவங்காடி கணபதி கோயிலில் மேல்சாந்தி நியமனம் கிடைத்தது. அங்கு விநாயகரை பூஜித்த போது தனது சபரிமலை மேல்சாந்தி பயணத்தில் இருந்த தடங்கல்கள் எல்லாம் விலகி விட்டது என்கிறார் சுப்பிரமணியன் நம்பூதிரி.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் என்பதால் சபரிமலை மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிக்க பல அனுமதிகள் பெற வேண்டி இருந்ததாகவும், அது கிடைத்த பின்னர் எல்லாம் சிறப்பாக அமைந்தது என்றும் முதல் பெயராக சபரிமலை மேல்சாந்தி பட்டியலில் இடம் பெற்றதாகவும் கூறினார்.

இளமை பருவத்திலேயே தந்தை வழியில் சாஸ்திர கல்வியில் அக்கறை காட்டி தந்திரசாஸ்திரம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றுடன் கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளையும் படித்துள்ளார் என்பது ஆச்சரிய தகவல். கராத்தே, குங்பூ -வில் பிளாக் பெல்ட் பெற்றிருக்கிறார்.

மக்களின் பார்வையில் சாஸ்திர பூஜைகளும், கராத்தே, குங்பூ போன்ற அடிமுறைகளும் இருதுருவங்களாக பார்க்கப்படும் போது நீங்கள் இந்த இரண்டடையும் ஒரு சேர கற்றது எப்படி என்று கேட்ட போது...

இது தவறான பார்வை. கராத்தேயும், குங்பூவும் பாரத சாஸ்திரிய கலைகள். தமிழ் நாட்டில் அகஸ்திய பரம்பரையை சேர்ந்த போதிதர்மன் என்பவர்தான் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு இந்த கலையை வளர்த்து பின்னர் சீனா, ஜப்பானுக்கு சென்றார். அங்குள்ளவர்கள் இவரிடம் இருந்துதான் கராத்தேயும், குங்பூவும் படித்தனர். நமது யோக சாஸ்திரமும் பாரதியமும் இல்லாமல் எதுவும் இல்லை,' என்றார்.

'பிளாக்பெல்ட் கராத்தே வீரரான நீங்கள் ஐயப்பனுக்கு பூஜை செய்ய செல்கிறீர்களே' எனக்கேட்ட போது…

'கேரளாவில் களரி பயிற்று என்பது பிரபலமான கலை. 18 களரிகளின் சொந்தக்காரர் பகவான் ஐயப்பன். ஆலங்காடு களரி, செம்போல களரி, சீதப்பன்சிற களரி போன்றவை ஐயப்பனால் உருவாக்கப்பட்டது.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சீதப்பன்சிற களரியில் ஐயப்பன் பயன்படுத்திய வாள் தற்போதும் உள்ளது. சபரிமலை சீசனில் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வணங்குகின்றனர்' என்றார்.

தங்கம் கொள்ளை பரபரப்பில் இருக்கும் சபரிமலையில், இனி ஓராண்டு பிளாக்பெல்ட் கராத்தே வீரர் சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரியின்பாதுகாப்பு இருக்கும் என்பது பக்தர்களுக்கு ஆறுதலான விஷயம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us