sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

லட்சிய ஆசிரியர்!

/

லட்சிய ஆசிரியர்!

லட்சிய ஆசிரியர்!

லட்சிய ஆசிரியர்!


PUBLISHED ON : பிப் 28, 2026

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, முல்லைநகர், தனபால் மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 10ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியை மல்லிகா, பாடங்களை இனிமையான குரலில், பாடல் வடிவில் நடத்துவார்; எளிமையாக புரிய வைப்பார்.

அவர் பாடம் நடத்தினாலும், கதைகள் கூறினாலும், 'லட்சியம்' என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவார். அதனால், அவரை அன்புடன், 'லட்சிய ஆசிரியை' என்றே கூறுவோம். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு சென்ற போது, மாணவர்களுக்கு விடைத்தாள்களை தந்தார், தமிழாசிரியை. அதில் மதிப்பெண் குறைவாக பெற்ற, 15 பேரை மட்டும், பள்ளி முடிந்ததும் சந்திக்க கூறினார்; அதில், நானும் ஒருவன்.

ஆசிரியையை சந்தித்த போது, படிப்பின் நோக்கம், செய்யும் வேலையின் குறிக்கோள் போன்றவற்றை எடுத்துக் கூறி, 'அதிக மதிப்பெண்கள் என்ற லட்சியத்தை குறிக்கோளாக வைத்து, உங்களை அடையாளப்படுத்துங்கள்...' எனக் கூறி, ஊக்கம் தந்து அனுப்பினார். அடுத்த தேர்வில், நாங்கள் அதிக மதிப்பெண் எடுத்தோம்.

தற்போது என் வயது, 40. பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறேன். என் லட்சிய ஆசிரியை கற்றுத்தந்தபடி பணியாற்றி, என் வகுப்பில், 100 சதவீத மாணவர்களை வெற்றியடைய செய்து வருகிறேன். அதற்கு பரிசாக, 'தினமலர்' நாளிதழின், 'லட்சிய ஆசிரியர்' விருதையும் பெற்றுள்ளேன். வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டிய தமிழாசிரியை மல்லிகாவை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.

- பா.நுாருல்லாஹ், மதுரை. தொடர்புக்கு: 99449 77741.






      Dinamalar
      Follow us