தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முன்னேற்றிய ஹிந்தி மொழி!

முன்னேற்றிய ஹிந்தி மொழி!

முன்னேற்றிய ஹிந்தி மொழி!


PUBLISHED ON : மே 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், 8ம் வகுப்பு படித்தேன். காந்தியால் தோற்று விக்கப்பட்ட, தட்சிணபாரத் ஹிந்தி பிரசார சபா ஆசிரியராகவும், ஹிந்தி மொழி கற்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விளக்கும், 'பிரசாரக்' ஆகவும், எங்கள் பகுதியை சேர்ந்த, சையத் ஹமீத் பணியாற்றினார்.

அவர், மாலை வேளைகளில் நடத்தி வந்த வகுப்புகளில் சேர்ந்து, ஹிந்தி படித்தேன். 'ராணுவத்தில் பணியாற்றுவது எப்படி பெருமையோ, அதுபோல தேசம் பேசும் ஹிந்தி மொழியை கற்பிப்பதும் பெருமை' என்று, புரிய வைத்தார். ஹிந்தி மொழியின் ஆரம்ப நிலையான, 'ப்ராத்மிக்' முதல், பட்டதாரி நிலையான, 'விஷாரத்' வரை கற்று, 1972ல், 'ஹிந்தி பிரச்சாரிகா' ஆனேன்.

ஹிந்தி பி.எட்., முடித்து, அலகாபாத் பல்கலைக்கழகத்தில், 'சாஹித்யரத்னா' பட்டமும் பெற்றேன். அதே வேளையில், தமிழில் எம்.ஏ., - எம்பில்., பட்டதாரியாகவும் தேர்ச்சி பெற்று, தனியார் பள்ளியில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆசிரியையாக பணிபுரிகிறேன்.

ஹிந்தி பிரசார சபா தேர்வுகளுக்கு, மாணவ - மாணவியரை தயார் செய்து, அனுப்பி வருகிறேன். என்னிடம் கற்ற பலர் டில்லி, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். எனக்கு பொருளாதார முன்னேற்றமும், சமூக அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

எனக்கு 49 வயதாகிறது. இத்தனை பெருமைகளுக்கும் காரணம், என் ஹிந்தி ஆசிரியர், சையத் ஹமீது. தற்போது, 85 வயதான அவரை, அவ்வப்போது சந்தித்து, ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.

- வி.பத்மாவதி, காஞ்சிபுரம்.

தொடர்புக்கு: 95971 96833

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us