PUBLISHED ON : ஜூன் 06, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 250 கிராம்
பொடித்த வெல்லம் - 100 கிராம்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
வாழைத்தண்டை வட்ட வடிவில் நறுக்கி, நார் நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து எடுக்கவும். வெல்லப்பொடியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் வாழைத்தண்டு துண்டுகளை போடவும். பின், எலுமிச்சை சாறு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். வெந்த வாழைத்தண்டு துண்டுகளை தட்டில் பரப்பி பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பை அதன் மீது துாவவும்.
சுவை மிக்க, 'வாழைத்தண்டு ஜாமுன்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். மாலை சிற்றுண்டியாக பரிமாற ஏற்றது.
- என்.குர்ஷித், நெல்லை.
