PUBLISHED ON : ஜூன் 13, 2026

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 9ம் வகுப்பு படித்த போது வரலாறு, புவியியல் ஆசிரியராக இருந்தார், துரைசாமி. வரலாறு பாடத்தில் முக்கிய நிகழ்வுகளை, அவை நடந்த ஆண்டு விபரத்துடன் கரும்பலகையில் எழுதி விளக்குவார்.
இரண்டாம் உலகப் போரில், கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், அணுகுண்டால் கடும் அழிவை சந்தித்ததை, உணர்வுப்பூர்வமாக விவரித்தார் புவியியல் ஆசிரியர். உலக வரைப்படங்களை காட்டி, எந்த கண்டத்தில் எந்த நாடு, எங்கு உள்ளது என கவனிக்க வைத்து, புரியும்படி கற்றுக் கொடுத்தது மனதில் பதிந்தது.
தற்போது, என் வயது, 69; இல்லத்தரசியாக இருக்கிறேன். பத்திரிகைகளில் உலக செய்திகள் வாசிக்கும் போது, அந்தந்த நாட்டின் படம் காட்சியாக மனதில் குவிந்து, சுவாரசியம் தருகிறது. இதற்கு, பள்ளி வகுப்பிலே அடிச்சுவடு அமைத்து, மனதில் பதிக்க உதவிய வரலாற்று ஆசிரியர் துரைசாமி நினைவை போற்றுகிறேன்.
- எஸ்.திலகவதி, ஈரோடு. தொடர்புக்கு: 99420 53799
