
என் வயது 69; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அனைத்து வயதினருக்கும் அறிவூட்டும் பொக்கிஷமாக விளங்கி வருகிறது.
பள்ளி, கல்லுாரி நாட்களில் மறக்க முடியாத நிகழ்வுகளை எடுத்துக் கூறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' மேன்மையிலும் மேன்மை. இதமான அறிவுரை தரும், 'இளஸ் மனஸ்!' தொடர் பயனுள்ளது.
சிறுகதை, மம்மீஸ் ெஹல்த் கிச்சன், மொக்க ஜோக்ஸ் என, அனைத்து பகுதிகளும் சிறப்புடன் வருகின்றன. சிறுவர், சிறுமியர் வரையும் வண்ண ஓவியங்களால், 'மழலையர் பக்கம்!' மிளிர்ந்து ரசனையை வளர்க்கிறது. மழலையரின் பிஞ்சு முகங்கள், குட்டி குட்டி மலர்களாக உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.
அரிய அறிவியல் தகவல்கள், 'அதிமேதாவி அங் குராசு' பகுதியை அலங்கரிக்கின்றன. என் போன்ற பெரியோரும் வாசகராக உள்ளது சிறுவர்மலர் இதழுக்கு மட்டுமே. இந்த பணி ஆல் போல் தழைத்து, எட்டு திக்கும் பரவி, மென்மேலும் வளர மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
-- எஸ்.ஆர்.முருகன், கோவை