PUBLISHED ON : நவ 14, 2026

என் வயது, 75. நிதி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியில் இருந்த போது, அலுவலகத்தில், 'தினமலர்' நாளிதழ் வாங்கி ஆர்வமாக படிப்போம். இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை, வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க, போட்டி போட்டபடி முந்துவோம்.
வாரந்தவறாமல் சிறுவர்மலர் இதழில் படைப்புகளை விடாமல் படித்து விடுவேன். படித்ததை முன்வைத்து குடும்பத்தில் அனைவரும் கலந்து உற்சாகத்துடன் உரையாடுவோம். பணி ஓய்வு பெற்ற பின், குடும்பத்தினருடன் படிப்பதற்கு வீட்டில் தினமலர் வாங்குகிறோம்.
அலுவலகத்தில் காட்டிய அதே ஆர்வத்துடன் சிறுவர்மலர் இதழை படித்து மகிழ்கிறேன். சிறுவர் முதல், முதியோர் வரை, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது, சிறுவர்மலர் இதழ். அது தொடர்ந்து வெளிவர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
- என்.சுப்ரமணியன், சென்னை.
தொடர்புக்கு: 80159 84584
