PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
ஏப்.1: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
ஏப்.2: கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சட்டசபையில் தீர்மானம்.
ஏப்.4: உலகின் முதல் சிவாலயம் எனும் உத்தரகோச மங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏப்.7: தென்காசி உலகம்மன், காசிவிஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடந்தது.
ஏப்.8: கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், '10 மசோதாக்களை கிடப்பில் போட்டது தவறு. இவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும்' என உச்சநீதி மன்றம் தீர்ப்பு.
ஏப்.10: பா.ம.க., தலைவராக நானே இருப்பேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என ராமதாஸ் அறிவிப்பு. இதைத்தொடர்ந்து இருவரும் மாறி மாறி அறிவிப்பை வெளியிட்டதால் கட்சியில் குழப்பம்.
ஏப்.12: தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு.
* பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்.
ஏப்.17: அரசாணைகளை தமிழிலேயே வெளியிட அனைத்து துறை செயலர்கள், கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.
ஏப்.18: ஊட்டி, கொடைக்கானல் உட்பட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 28 வித பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
ஏப்.19: சென்னையில், முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை (மெரீனா பீச் - செங்கல்பட்டு) துவக்கம்.
ஏப்.25: ஊட்டியில் கவர்னர் ரவி நடத்திய துணைவேந்தர் மாநாட்டை, அரசு பல்கலை துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
ஏப்.30: தே.மு.தி.க., இளைஞர் அணி செயலராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதவியேற்பு.
இந்தியா
ஏப்.1: குஜராத்தின் தீசாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து. 21 பேர் பலி.
* டில்லியில் பிரதமர் மோடி - சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட் சந்திப்பு.
ஏப்.4: பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் 87, காலமானார்.
ஏப்.6: மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலராக எம்.ஏ.பேபி தேர்வு.
ஏப்.8: டில்லியில் பிரதமர் மோடி - துபாய் இளவரசர், யு.ஏ.இ., துணை பிரதமர் ஷேக் ஹம்தான் சந்திப்பு.
ஏப்.10: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். டில்லி திஹார் சிறையில் அடைப்பு.
ஏப்.13: பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வர இருந்து ரூ. 1800 கோடி போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஏப்.18: யுனெஸ்கோ உலக நினைவக பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்ப்பு.
ஏப்.21: டில்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு.
ஏப்.24: ஒடிசாவின் சிமிலிபல் தொல்லியல் பகுதி, நாட்டின் 107வது தேசிய பூங்காவாக அறிவிப்பு.
ஏப்.28: இந்தியாவில் 2011- 12ல் இருந்து 2022 - 23 வரை 17.10 கோடி பேர் பட்டினியில் இருந்து மீட்பு என உலக வங்கி அறிக்கை வெளியீடு.
உலகம்
ஏப்.2: உலக நாடுகள் அமெரிக்கப் பொருளுக்கு விதிக்கும் அதே அளவு வரியை விதிக்கும் முறையை அறிவித்தார் அதிபர் டிரம்ப்.
* அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 902 பேருடன் அமெரிக்கா முதலிடம். அடுத்து சீனா(450), இந்தியா (205) உள்ளன.
ஏப்.3: தாய்லாந்தில் நடந்த 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
ஏப்.4: பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்.
ஏப்.5: கம்போடியாவின் 'ரோனின்' பெருச்சாளி, கண்ணி வெடி (109), வெடிக்காத வெடிகளை (15) கண்டறிந்து கின்னஸ் சாதனை படைத்தது.
ஏப்.8: டொமினிகன் குடியரசு நாட்டில், பாடல் நிகழ்ச்சி நடந்த இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்தது. 236 பேர் பலி.
ஏப்.10: இந்திய ஜனாதிபதி முர்மு போர்ச்சுக்கல், ஸ்லோவாக்கியா பயணம்.
ஏப்.14: வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பெல்ஜியத்தில் கைது.
ஏப்.18: காங்கோவில் எம்பன்டகாவில் படகில் தீப்பற்றி மூழ்கியது. 148 பேர் பலி.
ஏப்.21: சீனா ஷாங்காய் நகரில் 'சைனா கோல்டு' நிறுவனம் சார்பில், தங்கத்தை பணமாக்கும் உலகின் முதல் ஏ.டி.எம்., திறப்பு.
ஏப்.23: காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல். சவுதி பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி.
புதிய பாம்பன் பாலம்
ஏப். 6 : மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பாம்பன் கடலில் இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு பாலத்தை (2.2 கி.மீ., நீளம்) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடல் காவலன்
ஏப்.28: இந்திய கப்பல் படைக்கு பிரான்சிடம் இருந்து ரூ.64 ஆயிரம் கோடிக்கு 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்.
இளைய மடாதிபதி
ஏப். 30: காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ரயிலில் ஏ.டி.எம்., அறிமுகம்
ஏப். 17 : இந்தியாவில் முதன்முறையாக மும்பை - மான்மாட் ரயிலில் ஏ.டி.எம்., நிறுவப்பட்டது.
டாப் 4
* ஏப். 4: தமிழக அரசு 2022 பிப். 5ல் நிறைவேற்றிய 'நீட்' விலக்கு மசோதாவை ஜனாதிபதி முர்மு நிராகரித்தார்.
* ஏப். 5: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.
* ஏப். 28: மே 7, ௨௦௨௧ல் பதவியேற்ற தமிழக அமைச்சரவை ஏழாவது முறையாக மாற்றம். செந்தில் பாலாஜி, பொன்முடி நீக்கம். மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர்.
* ஏப். 30: மக்கள்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

