sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

/

2025 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜனவரியில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜன.3: வேலுாரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி., கதிர் ஆனந்த் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

* அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னைக்கு பேரணி புறப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் மதுரையில் கைது.

ஜன.4: சாத்துார் பொம்மையா புரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து. 6 பேர் பலி.

ஜன.5: சிந்துவெளி எழுத்து முறையை புரிந்து கொள்ள உதவும் நபர் அல்லது அமைப்புக்கு ரூ. 8.5 கோடி பரிசு. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* மார்க்சிஸ்ட் மாநில செயலராக சண்முகம் பதவியேற்பு.

ஜன.11: 12 வயதுக்குட்பட்ட சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு துாக்கு உட்பட பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் நிறைவேறியது.

ஜன.16: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம் 73, காலமானார்.

இந்தியா

ஜன.2: ம.பி., போபாலில் 1984ல் 'விஷவாயு' கசிவான ஆலையில் 40 ஆண்டுக்குப்பின் 3.77 லட்சம் கிலோ அபாய கரமான கழிவுகள் அகற்றம்.

ஜன.7: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, டில்லியின் ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கீடு.

ஜன.8: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்குவதில் நெரிசல். 6 பக்தர்கள் பலி.

ஜன.11: பஞ்சாபில் துப்பாக்கியை துடைத்த போது 'ட்ரிக்கர்' அழுத்தப்பட்டதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குர்ப்ரீத் பாசி உயிரிழப்பு.

ஜன.13: ஜம்மு காஷ்மீரின் காகங்கீர் - சோனாமார்க்கை இணைக்கும் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை திறப்பு. நீளம் 6.5 கி.மீ. செலவு ரூ.2700 கோடி.

ஜன.14: கப்பல் படையில் முதல்முறையாக ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் சேர்க்கப்பட்டன.

* போர்கப்பல்களான ஐ.என்.எஸ் - நீலகிரி, ஐ.என்.எஸ் - சூரத்

* நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ் - வாக்.ஷீர்

ஜன.15: டில்லி கோட்லா சாலையில் புதிதாக கட்டிய காங்., தலைமை அலுவலகம் திறப்பு.

ஜன.16: மும்பையில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வீட்டில் நுழைந்த கொள்ளையன் ஒருவன் நடிகரை ஆறு முறை கத்தியால் குத்தினான்.

ஜன.18: 65 லட்சம் கிராம மக்களுக்கு சொத்து அட்டைகளை வழங்கினார் பிரதமர் மோடி.

ஜன.21: சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

ஜன.22: மகாராஷ்டிராவின் பச்சோரா பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியது. அவசரமாக பயணிகள் இறங்கியபோது எதிரே வந்த ரயில் மோதி 12 பேர் பலி.

ஜன.27: உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலானது.

ஜன.29: அசாம் தலைநகர் திஸ்பூர். தற்போது இரண்டாவது தலைநகராக திப்ருஹார்க் உருவானது.

*பிரயாக்ராஜ் 'மகாகும்ப மேளா'வில் நெரிசல். 30 பேர் பலி.

உலகம்

ஜன.1: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வாதி துப்பாக்கிச்சூடு. 15 பேர் பலி.

ஜன.7: சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தில் நிலநடுக்கம். 126 பேர் பலி.

* இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' அமைப்பில் 10வது நாடாக இணைந்தது இந்தோனேஷியா.

ஜன.8: கானா அதிபராக ஜான் மஹாமா பதவியேற்பு.

ஜன.11: வெனிசுலா அதிபராக மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ பதவியேற்பு.

ஜன.15: தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ஊழல் தடுப்பு போலீசாரால் கைது.

* இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்.

ஜன.17: அல் - காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14, மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது.

ஜன.18: ஈரான் உச்சநீதி மன்றத்துக்குள் புகுந்த மர்ம நபர், இரண்டு நீதிபதியை சுட்டு, தானும் தற்கொலை.

ஜன.21: துருக்கியின் செபன் நகரில் 12 மாடி ஹோட்டலில் தீ. 76 பேர் பலி.

ஜன.24: அயர்லாந்து பிரதமராக மிச்செல் மார்டின் பதவியேற்பு.

ஜன.26: சூடானில் மருத்துவமனை மீது 'ட்ரோன்' தாக்குதல். 70 பேர் பலி.

* சொத்துகுவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் யோஷிதா கைது.

ஜன.29: வாஷிங்டனில் நடுவானில் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மோதின. 19 பேர் பலி.

திரிவேணி சங்கமத்தில் திருவிழா

ஜன.13: உ.பி.,யின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் 'மகா கும்பமேளா'வில் 66 கோடி பேர் புனித நீராடினர்.

தமிழகத்துக்கு பெருமை

ஜன.14: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவராக நாகர்கோவிலை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் பதவியேற்பு.

மீண்டும் டிரம்ப்:

ஜன.20: அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் 79, பதவியேற்பு. ஏற்கனவே 2017-21 பதவியில் இருந்தார்.

டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு

ஜன.23: மதுரை மேலுார் அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு. ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

டாப் 04

* ஜன.4: உலகின் வயதான ஜப்பான் பெண் டோமிகோ இடூகா 116, காலமானார்.

* ஜன.6: சட்டசபை கூட்ட துவக்கத்தில் தேசிய கீதம் பாடாததால், உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர் ரவி.

* ஜன.20: கோல்கட்டா மருத்துவக்கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலையில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கோல்கட்டா உயர்நீதிமன்றம்.

* ஜன.28: பெலாரஸ் அதிபராக தொடர்ந்து ஏழாவது முறையாக அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ பதவியேற்பு.






      Dinamalar
      Follow us