sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்

/

2025 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்

2025 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்

2025 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

பிப்.2: சேலம் வெள்ளாள குண்டத்தில் உலகின் உயரமான நந்தி சிலைக்கு (45 அடி) கும்பாபிஷேகம் நடந்தது.

பிப்.8: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., வின் சந்திரகுமார் 91,558 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.

பிப்.10: இந்தியாவின் முதல் காமிக்ஸ் நுாலகம் ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) அரசு பள்ளியில் திறப்பு.

பிப்.11: சென்னை நுங்கம் பாக்கத்தில் காம்தார் நகர் முதல் தெருவுக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்டது.

பிப்.14: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளித்தது.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப் பட்டிருந்த 1526 ஏக்கர் சொத்து ஆவணம், 27 கிலோ தங்கம் தமிழக அரசிடம் ஒப்படைப்பு.

பிப்.18: மதுரை, திருச்சியில் 'டைடல் பார்க்' அமைக்க அடிக்கல்.

பிப்.21: பிரதமரின் தனிச் செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்.

பிப்.24: தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்து கடை திறப்பு.

பிப்.26: கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு.

* உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக பால கிருஷ்ணன் பதவியேற்பு.

இந்தியா

பிப்.8: டில்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 48ல் வென்று பா.ஜ., ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடம் பெற்றது.

பிப்.9: சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்பு படை என்கவுன்டரில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் வீர மரணம்.

* மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் (பா.ஜ.,) ராஜினாமா.

பிப்.10: டில்லியில் அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு.

பிப்.11 : அயோத்தி ராமர் கோயில் தலைமை பூஜாரி ஆச்சர்யா மகந்த் சத்யேந்திர தாஸ் 85, காலமானார்.

பிப்.12: ஊழல் குறைவான நாடுகளில் டென்மார்க் முதலிடம். இந்தியா 96வது இடம்.

பிப்.13: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்.

பிப்.15: டில்லி ரயில் நிலையத்தில், பிரயாக்ராஜ் கும்பமேளா செல்ல காத்திருந்தவர்கள் இடையே நெரிசல். 18 பேர் பலி.

பிப்.16: ஜன.29,2025 நிலவரப்படி டில்லியில் 4852, தமிழகத்தில் 4558 டிரோன்கள் உள்ளன.

பிப்.17: டில்லியில் பிரதமர் மோடி - கத்தார் அதிபர் அகமது அல்தானி சந்திப்பு.

பிப்.19: எந்த மொழியையும் மாற்றம் செய்யும் வசதி உத்தரபிரதேச சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிப்.20: தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பதவிக் காலம் 2027 மார்ச் 31 வரை நீட்டிப்பு.

பிப்.22: தெலுங்கானா ஸ்ரீசைலம் அணை அருகே 44 கி.மீ., துார சுரங்கப்பாதை தோண்டும் போது விபத்து. 7 பேர் பலி.

பிப்.25: சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் (1984, டில்லி) காங்., முன்னாள் எம்பி., சஜ்ஜன் குமாருக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

பிப்.26: உ.பி., பிரயாக்ராஜில் (ஜன. 13 - பிப். 26) மகா கும்பமேளா நிறைவு.

* தெலுங்கானாவில் 1-10ம் வகுப்புக்கு தெலுங்கு பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு.

பிப்.26: மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையை அசாமில் ஆயில் இந்தியா நிறுவனம் அமைக்கிறது.

உலகம்

பிப்.2: மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, சீனாவுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

பிப்.4: பெல்ஜியம் பிரதமராக பார்ட் டீ வீவர் பதவியேற்பு.

*அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 362 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிப்.5: பாலஸ்தீனத்தின் காசாவை, தங்கள் கட்டுப் பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

பிப்.6: வங்கதேசத்தின் தாகாவில் இடஒதுக்கீடு கோரி இளைஞர்கள் போராட்டம். முன்னாள் அதிபர் மறைந்த முஜிபுர் ரஹ்மான் வீட்டிற்கு தீ வைப்பு.

பிப்.9: மெக்சிகோவின் கான்கன் நகரில் பஸ் - லாரி மோதி விபத்து. 41 பேர் பலி.

* நமீபியாவின் முதல் அதிபர் சாம் நிஜோமா 95, காலமானார்.

பிப்.10: கவுதமாலா தலைநகர் கவுதமாலா சிட்டியில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து. 56 பேர் பலி.

பிப்.14: வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி சந்திப்பு. 'எப்35' போர் விமானம் வாங்குவது, இருநாட்டு வர்த்தகத்தை ரூ. 43 லட்சம் கோடியாக உயர்த்துவது உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிப்.26: சூடான் ராணுவ விமான விபத்தில் 46 பேர் பலி.

பிப்.28: வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு.

செயற்கை நுண்ணறிவு மாநாடு

பிப்.11: பாரிசில் நடந்த ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

தேர்தல் ஆணையர்

பிப்.19: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்பு.

மூன்றாவது பெண் முதல்வர்

பிப்.20: டில்லியின் மூன்றாவது பெண் முதல்வராக பா.ஜ.,வின் ரேகா குப்தா பதவியேற்பு.

'கின்னஸ்' நடனம்

பிப்.24: அசாமில் தேயிலை தொழில் தொடங்கி 200 ஆண்டு ஆனது. அதனை நினைவு கூறும் விதமாக 8888 பழங்குடியின பெண்கள் 'ஜூமோயர்' நடனமாடி கின்னஸ் சாதனை.

டாப் 4

* பிப்.5: உ.பி., பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி நீராடினார்.

* பிப்.10: மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீராடினார்.

* பிப்.15: வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம் 3.0' துவக்கம்.

* பிப்.26: அமெரிக்க குடியுரிமைக்கு ரூ. 43 கோடி 'தங்க அட்டை' விசா. அதிபர் டிரம்ப் அறிவிப்பு.






      Dinamalar
      Follow us