sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

/

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மே10: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு ஆதரவாக சென்னை, டிஜிபி அலுவலகம்-தீவுத்திடல் வரை முதல்வர் ஸ்டாலின் நடைபயணம்.

மே11: புதிய 11 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் துவக்கினார்.

மே16: ரூ. 1000 கோடி முறைகேடு வழக்கில், டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

மே20: சிவகங்கை சிங்கம் புணரியில் கிரஷர் குவாரியில் பாறை விழுந்து விபத்து. 6 பேர் பலி.

மே21: பல்கலை., துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மே26: தமிழகத்தில் புதிதாக 11 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவக்கம்.

இந்தியா

மே3: நாட்டின் முதல் டிரான்ஸ்மீடியா பொழுதுபோக்கு நகரம், ஆந்திரா அமராவதியில் அமைக்கப் படுகிறது.

மே5: இந்தியாவில் முதன் முறையாக ஐதராபாத்தில் தங்க நகைகள் வாங்க, விற்பனை செய்வதற்கான ஏ.டி.எம்., -ஐ கோல்டுசிக்கா நிறுவனம் அறிமுகம் செய்தது.

மே7: இந்தியாவில் 2021 கணக்கின்படி, கருவுறுதல் விகிதம் 2.0 என உள்ளதாக அறிவிப்பு. அதிகமாக பீஹாரில் (3.0), குறைவாக டில்லி, மேற்கு வங்கத்தில் (1.4) என உள்ளது.

* மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உட்பட நாட்டின் 244 மாவட்டங்களில் 'போர் ஒத்திகை' நடந்தது.

மே8: உத்தரகண்டில் ஹெலி காப்டர் விபத்து. யாத்திரை சென்ற 6 பேர் பலி.

மே12: ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்தது ஆந்திர அரசு.

மே13: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்ததாக பொய் பிரசாரம் செய்யப்பட்ட பஞ்சாபின் ஆதம்பூர் விமானப் படை தளத்தில், ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

* பஞ்சாபின் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி.

மே14: உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு. நவ.23ல் ஓய்வு பெற்றார்.

* எல்லை தாண்டியதாக கைதான பி.எஸ்.எப்., வீரர் பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் பாக்., ஒப்படைப்பு.

* ட்ரோன்களை இடை மறித்து அழிக்கும் 'பார்கவ அஸ்திரத்தை' டி.ஏ.எல்., நிறுவனம் வடிவமைத்துள்ளது.

* மணிப்பூரின் சாந்தலில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி.

மே17: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை வெளிப் படுத்துதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விளக்கும் விதமாக அனைத்துக்கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுவை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.

மே18: தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ. 18 பேர் பலி.

மே19: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா 'யு டியூபர்' ஜோதி மல்கோத்ரா உட்பட 12 பேர் கைது.

மே21: சத்தீஸ்கரில் பாது காப்பு படை தாக்குதலில் நக்சலைட் தலைவர் பசவ ராஜூ உட்பட 27 பேர் சுட்டுக் கொலை.

மே22: டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. பிரதமர் மோடியை சந்தித்தார்.

மே23: நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மே26: பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட மகன் தேஜ் பிரதாபை ஆர்.ஜே.டி., யில் இருந்து நீக்கினார் லாலு பிரசாத்.

மே28: உள்நாட்டில் உருவான உலகின் முதல் உயர் தெளிவுத் திறன் கொண்ட 'பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பை' மத்திய அரசு தொடங்கியது.

உலகம்

மே1: டிரினிடாட் டொபாகோ பிரதமராக இந்தியா வம்சாவளி கம்லா பெர்சாத் பிசாசர் பதவியேற்பு.

மே3: டில்லியில் பிரதமர் மோடி - அங்கோலா அதிபர் மேனுவேல் லாரன்சோ சந்திப்பு. சர்வதேச சோலர் கூட்டமைப்பில் 123 நாடாக அங்கோலா இணைந்தது.

மே4: ஏமன் பிரதமராக சலீம் பின் பிரெய்க் பதவியேற்பு.

மே14: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பதிவை ரத்து செய்தது அந்நாட்டு தேர்தல் ஆணையம்.

* கனடா வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளி அனிதா ஆனந்த் பதவியேற்பு.

மே23: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் வெளி நாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

மே 24: அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலையில் வெளி நாட்டு மாணவர் சேர்க்கைக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

மே26: ருமேனியா அதிபராக நிகுசர் டான் பதவியேற்பு.

மே28 : ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் அறிவிப்பு.

அழகோ அழகு...

மே31: தெலுங்கானா ஐதராபாத்தில் நடந்த உலக அழகி (மிஸ் வேர்ல்டு) போட்டியில் பட்டம் வென்றார் தாய்லாந்தின் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ. 16 வயதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்.

சிங்கப்பெண்

மே27: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த சி.ஐ.எஸ்.எப்., படையின் முதல் பெண் அதிகாரி கீதா சமேதா.

புதிய போப்

மே8: அமெரிக்காவின் ராபர்ட் பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு. 'பதினான்காம் லியோ' என அழைக்கப்படுவார்.

அதிகரித்த கடற்கரை

மே29: இந்திய கடற்கரையின் நீளம் 7516.6 கி.மீ., என இதுவரை இருந்தது. தற்போது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் 11,098 கி.மீ., ஆனது.

டாப் 4

* மே4: ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பதவியேற்பு.

* மே6: ஜெர்மனி அதிபராக பிரட்ரிக் மெர்ஸ் பதவியேற்பு.

* மே13: பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

* மே15: சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி, தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு.






      Dinamalar
      Follow us