sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'பீ ச்' மீட்டிங். வழக்கமாக நாங்கள் சந்திக்கும் இடத்தில், மெட்ரோ ரயில் பணிக்காக, பெரிய பெரிய இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. எனவே, அங்கிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தோம். பணி நடைபெறும் இடத்தை சுற்றிலும், இரும்பு தகடுகள் அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், ஒருவர், தன் கையில் சிகப்பு கொடி ஒன்றை பிடித்து, அசைத்தபடி, அப்பக்கமாக வரும் வாகனங்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.

அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்த அன்வர் பாய், 'பாருப்பா... யாருக்கும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்று, எச்சரிக்கை செய்வதற்காகவே, ஒரு ஆளை நியமித்துள்ளனர். இதுவும் ஒரு வேலை வாய்ப்பாகி விட்டது...' என்றார். 'ஓய்... இதென்ன பிரமாதம். வெளியூர் செல்லும்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ஹோட்டல்களின் முன், 'சாப்பிட வாங்க, சாப்பிட வாங்க...' என்று ஒருவர் கையில் கொடி ஒன்றை வைத்து, அசைத்தபடி வரவேற்பதை பார்த்திருக்கிறீர்களா?

இதற்காக சம்பளம் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளனர், ஹோட்டல் முதலாளிகள். அதுவும் ஒரு வேலை தானே...' என்றார், லென்ஸ் மாமா. 'நீர் சொல்வது சரி தான். இதுபோல் சின்ன சின்ன ஆனால், அவசியமான வேலைகள் நிறைய உள்ளன. இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உள்ளன. உலகில் பலர் வழக்கமான தொழில்களில் ஈடுபட்டாலும், சிலர் மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

'இவை, சில சமயம் ஆபத்தானவையாகவும், சில சமயம் வேடிக்கையானவையாகவும் இருக்கின்றன. ஆனால், இத்தகைய தொழில்கள், பல்வேறு தேவைகளை நிறைவு செய்கின்றன. அந்த வகையில், சில வினோதமான வேலைகள் என்னென்ன தெரியுமா?' என்று கூற ஆரம்பித்தார், குப்பண்ணா: * ஜப்பானில், ரயில்களில் அதிகக் கூட்டம் ஏற்படும் நேரங்களில், பயணியரை ரயிலுக்குள் தள்ளி விடும் வேலை உள்ளது. இவர்களை, 'ஓஷியா' என, அழைக்கின்றனர். ரயில் கதவுகள் சரியாக மூடுவதற்காக, இவர்கள் அந்த வேலையைச் செய்து உதவுகின்றனர்

* பின்லாந்தில், ஒரு ஹோட்டல், தங்கள் அறைகளில் இருக்கும் மெத்தைகளின் வசதியை சோதிக்க, ஒரு தொழில்முறை துாங்குபவரை நியமித்துள்ளது. அவர், ஒவ்வொரு இரவும் வெவ்வேறு மெத்தையில் துாங்கி, அதன் வசதி குறித்து அறிக்கை அளிக்கிறார்

* அமெரிக்காவின் புளோரிடாவில், நீருக்கடியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு, 'ஸ்கூபா டைவிங்' செய்து, 'பீட்சா'வை 'டெலிவரி' செய்யும் வேலை உள்ளது. அந்த வேலையை செய்பவர், 'பீட்சா'வை நீர்ப்புகா பெட்டியில் வைத்து நீந்திச் சென்று கொடுக்க வேண்டும்

* நம்மூர் போல ஆசிய நாடுகளில், இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில், தொழில்முறை அழுபவர்கள் உள்ளனர். இவர்கள் உரக்க அழுதால், இறந்தவரின் ஆன்மா இறைவனை அடையும் என, நம்பப்படுகிறது. இது பாரம்பரியமான ஒரு தொழில்

* பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கும் தொழில், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் உள்ளது. இப்படி எடுக்கப்படும் விஷம், விஷமுறிவு மருந்து தயாரிக்க பயன்படுகிறது

* ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, நெதர்லாந்தின் தலைநகர், ஆம்ஸ்டர்டாமில், ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான சைக்கிள்கள், கால்வாயில் விழுந்து விடுகின்றன. அவற்றை மீட்கும், 'சைக்கிள் மீட்பவர்' தொழில் உள்ளது. இவர்கள், ஆண்டுக்கு, 14 ஆயிரம் சைக்கிள்களை மீட்கின்றனர்

* கோல்ப் மைதானங்களில், தண்ணீரில் விழும் பந்துகளை, 'டைவிங்' செய்து எடுக்கும், 'கோல்ப் பால் டைவர்' தொழில், உலகெங்கும் உள்ளது. இத்தொழிலில் ஈடுபடுவோர், ஒரு நாளில், ஆயிரக்கணக்கான பந்துகளை சேகரிக்கின்றனர்

* சில நாடுகளில், நாய் உணவு சுவை பார்ப்பவர் தொழில் உள்ளது. இவர்கள், உணவின் சுவையை சோதித்து, போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுவர்

* 'பெயின்ட்' உலர்வதை கண்காணிக்கும் வேலை, இங்கிலாந்தில் உள்ளது. இவர்கள், கட்டடங்களில் பூசப்படும், 'பெயின்டின்' நிறம் மற்றும் அமைப்பு மாறுகிறதா என, கவனிப்பர்

* பொம்மை பழுதுபார்க்கும் தொழில், அமெரிக்காவில் உள்ளது. குழந்தைகளின் உடைந்து போன பொம்மைகளுக்கு கை, கால் மற்றும் கண்களை மீண்டும் பொருத்தி தருவது இவர்களது தொழில்

* பிரபல, 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம், தங்கள் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு முன், அனைத்தையும் பார்க்க, ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது, பார்வையாளர்கள், தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை எளிதாகக் கண்டுபிடிக்க உதவுகிறதாம்

* 'பெர்ப்யூம்' மற்றும் 'டியோடரன்ட்' போன்ற அழகு சாதனத் தொழில் செய்யும் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு நன்றாக வாசனை தருவதையும், வாசனையின் தாக்கத்தை அடையாளம் காணவும், வாசனை சோதனையாளர்களை பயன்படுத்துகின்றனர்

* அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும், 'பேய் வழிகாட்டி' தொழில்கள் உள்ளன. இந்த வழிகாட்டிகள், பாழடைந்த மாளிகைகள், கோட்டைகள் மற்றும் பேய் வீடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று, விளக்கம் தருவர்

* திருமணத்தில், கூட்டத்தை அதிகரித்து, மணமகன்-மணமகளுக்கு நல்ல, சமூக, 'இமேஜ்' கொடுக்க, போலி விருந்தினர்களாக பலர் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு, உலக நாடுகளில், பல வித்தியாசமான தொழில்கள் உள்ளன. எதிர்காலத்தில், இன்னும் பல புதிய, வினோத வேலைகள் உருவாகக் கூடும்.

- என்று கூறி முடித்தார், குப்பண்ணா. 'நம்மூரிலும், வித்தியாசமான வேலை வாய்ப்புகள் நாள்தோறும் உருவாகி கொண்டு தான் இருக்கிறது. உதாரணமாக, * அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது

* உயரமான மலை மற்றும் அருவிகளில் விழுபவர்களை மீட்பது அல்லது இறந்த உடல்களை துாக்கி வருவது

* டீ, காபி, டேஸ்ட் செய்து, தரத்தை பரிசோதிப்பது

* கல்யாண பெண்ணுக்கு புடவை கட்டி விடுவது...

இப்படி பல, ஜோலிகள் உள்ளன...' என்றார், லென்ஸ் மாமா. 'எப்படியோ சோம்பி திரியாமல், திருடாமல், வேலை செய்து பிழைக்கின்றனரே...' என்று நினைத்துக் கொண்டேன், நான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us