/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பழங்களில், உப்பு துாவி சாப்பிடலாமா?
/
பழங்களில், உப்பு துாவி சாப்பிடலாமா?
PUBLISHED ON : நவ 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாலும் அனைவரும் பழங்களை விரும்பி சாப்பிடுவர். அதிலும், கொஞ்சம் வித்தியாசமாக உப்பு துாவி சாப்பிடுபவர்களும் உள்ளனர்.
அதுவும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு துாவி சாப்பிடும் போது, அதன் சுவையே தனி தான்.
இவ்வாறு சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகளும் உள்ளன. அதாவது, பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன. நாம் உப்பு துாவி சாப்பிடுவதால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.
எனவே, புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு துாவி உண்பது நல்லது. கழுவி உண்ணக் கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவிய பின், உண்பது ஆரோக்கியமானது.

