
தனுஷின் ஹாலிவுட் திட்டம்!
தற்போது தமிழில் சில படங்களை இயக்கி நடித்து வரும், தனுஷ், எதிர்காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்கள் இயக்க திட்டமிட்டு வருகிறார். எதிர்காலத்தில், ஹாலிவுட் படங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.
'அப்படி நான் இயக்கும் படம், உலக ரசிகர்களை கவரக்கூடிய அதிரடியான, 'ஆக்ஷன்' கதையில் உருவாகும். அந்த படத்தில், இந்திய நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் கலந்து நடிப்பர்...' என்கிறார், தனுஷ்.
சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவை ஏமாற்றிய படங்கள்!
ம ற்ற நடிகையர் நடிக்க தயங்கும் வேடங்களில் கூட, தயங்காமல் நடிக்க கூடியவர், ஆண்ட்ரியா. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் அவர், நிர்வாண காட்சிகளில் நடித்த, பிசாசு-2 படம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதன்பின், அவர் நடித்த இன்னொரு படமான, மனுஷி படமும் கிடப்பில் உள்ளது.
இதனால், 'நான், 'ரிஸ்க்' எடுத்து நடித்த படங்கள், இப்படி திரைக்கு வர முடியாத சிக்கலில் கிடப்பதால், என் கேரியரே வீணாகி விட்டது. என்னை நம்பி அடுத்து படவாய்ப்பு தருவதற்கே தயங்குகின்றனர்...' என, தன் கவலையை வெளிப்படுத்தி வருகிறார், ஆண்ட்ரியா.
எலீசா
கவர்ச்சி வேடங்களில், பிரியங்கா மோகன்!
த னுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த போதும் புதிய படங்கள் இல்லாமல், தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார், பிரியங்கா மோகன்.
ஆனால், தமிழ் படங்களில், 'கிளாமர்' விவகாரத்தில், 'செக் போஸ்ட்' தாண்ட மாட்டேன் என, கடிவாளம் போட்டு வந்த நடிகை, தெலுங்குக்கு சென்ற வேகத்திலேயே கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார். அதையடுத்து, கோலிவுட்டின் சில, 'கமர்ஷியல்' பட இயக்குனர்களுக்கு, தான், 'கிளாமர் ஹீரோயினி' அவதாரம் எடுத்திருப்பதை தெரியப்படுத்தி, ஆதரவு கேட்டு வருகிறார்.
எலீசா
மீண்டும், 'ஹீரோ' ஆன, அர்ஜுன்!
த ன், 'ஹீரோ' மார்க்கெட் சரிவடைந்த பின், விஜயின், லியோ , அஜீத்தின், விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார், நடிகர் அர்ஜுன். தற்போது தன், 63வது பிறந்த நாளை கொண்டாடிய வேகத்தில், மீண்டும் ஒரு படத்தில், 'ஹீரோ' ஆக நடிக்க தயாராகி வருகிறார்.
இதனால், தன்னை தேடி வந்த வில்லன் வேடங்களை திருப்பி அனுப்பி விட்டார், அர்ஜுன். இந்த படத்தில் தற்போதைய, ரஜினி படங்கள் போன்று, தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள நடிகர்களையும் நடிக்க வைத்து, பல மொழியில் வெளியிட்டு, மார்க்கெட்டை பிடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சி.பொ.,
கருப்பு பூனை...
தமிழில் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்கு, தன் அபிமான, 'ஹீரோ'களான, பீட்சா நடிகர், சுள்ளான் நடிகர் போன்றவர்களுக்கு துாது விட்டார், காக்கா முட்டை நடிகை. ஆனால், 'மீண்டும், 'டூயட்' பாடுவதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுடன், 'டூயட்' பாட இளவட்ட நடிகையர் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்...' என, அம்மணிக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டனர். தன் பழைய நள்ளிரவு, 'பார்ட்டி' விவகாரங்களை கையில் எடுத்திருக்கும், காக்கா முட்டை நடிகை, கோலிவுட், டோலிவுட்டில் உள்ள சில நரைமுடி, 'ஹீரோ'களை தற்போது துரத்த துவங்கி இருக்கிறார்; மேலும், அசைவ காட்சிகளில் அத்துமீறி நடிப்பதற்கும் உத்தரவாதம் கொடுத்து வருகிறார்.
******
தன் கடைசி படத்தில், ஆளும் கட்சியின் ஊழல் புள்ளிகளுக்கு எதிராக சில, 'பஞ்ச் டயலாக்'குகளை வைத்திருந்த, தளபதி நடிகர், பின்னர் அதை நீக்க சொன்னார்; இப்போது மீண்டும் அந்த காட்சிகளை இணைக்குமாறு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த படம் திரைக்கு வந்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தினால், தன் அரசியல் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் கிடைக்கும் என, எதிர்பார்க்கும் தளபதி, இனிமேல் அரசியலில் பயந்தால் வேலைக்கு ஆகாது. அடித்து ஆட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால், தளபதி நடிகர் நடித்துள்ள இந்த கடைசி படம் திரைக்கு வரும்போது, அதில் இடம்பெற்றுள்ள ஆளும் கட்சிக்கு எதிரான காட்சிகள், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என, தெரியவந்துள்ளது.
சினி துளிகள்!
* த மிழில் தான் நடித்து முடித்துள்ள, மூன்று படங்கள் கிடப்பில் உள்ளதால், புதிய படங்களுக்கு தீவிரமாக முயற்சித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். வி ஜய் நடித்திருக்கும், ஜனநாயகன் படத்தில் பாலிவுட் நடிகர், பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
* வி ஷாலுடன், மதகஜராஜா படத்தில் நடித்திருந்த, அஞ்சலி மீண்டும் அவரது, 35வது படத்திலும் நடிக்கப் போகிறார். இந்த படத்தில், துஷாரா விஜயனும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
* விஜய் நடித்திருக்கும், ஜனநாயகம் படத்தில் பாலிவுட் நடிகர், பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
அவ்ளோதான்!