sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

1


PUBLISHED ON : அக் 26, 2025

Google News

PUBLISHED ON : அக் 26, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மெசேஜ்' சொல்லும், பிரதீப் ரங்கநாதன்!

லவ் டுடே, டிராகன் படங்களுக்கு பின் தற்போது, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், டியூட் படம் வெளியாகி உள்ளது. 'இந்த படங்கள் அனைத்துமே, 'கமர்ஷியல்' கதையில் உருவானதாக இருந்தாலும், அதற்குள் ஒரு கருத்து இருக்கும்...' என்று கூறும், பிரதீப் ரங்கநாதன், 'நான் நடிக்கும் எந்த ஒரு படமாக இருந்தாலும், இளைய சமூகத்துக்கு, 'மெசேஜ்' சொல்லுவேன். அதே சமயம் அந்த கருத்து கசப்பாக இல்லாத அளவுக்கு, 'கமர்ஷியல்' என்ற இனிப்பை கலந்து கொடுப்பேன்...' என்கிறார்.

-சினிமா பொன்னையா

வில்லி வேடங்களை துரத்தும், ரெஜினா!

அஜித்தின், விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்திருந்த, ரெஜினாவுக்கு, அதையடுத்து, கொடூரமான வில்லி வேடங்களாகவே நடிக்க வாய்ப்புகள் வருவதால், தன்னை முழு நேர வில்லி நடிகையாக ஆக்கிவிடுவரோ என்று பயந்து விட்டார். அப்படி அழைப்பு விடுத்த இயக்குனர்களை சந்தித்து, 'ரப் அண்ட் டப்பான வேடங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால், சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மாற்றினால் எப்படி? இந்த பிஞ்சு மூஞ்சி அதற்கெல்லாம் செட்டாகுமா...' என்று கேட்டு, அத்தகைய வேடங்களை திருப்பி அனுப்பி விட்டார், ரெஜினா.

- எலீசா

பல மொழி நடிகையான, ருக்மணி வசந்த்!

கன்னட நடிகையான தனக்கு, காந்தாரா சாப்டர்-1 படத்திற்கு பின், 'பாலிவுட்' வரை ரசிகர்கள் உருவாகி விட்டதால், 'எதிர்காலத்தில் பல மொழி படங்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன்...' என்கிறார், ருக்மணி வசந்த். மேலும், 'சரித்திர கதாபாத்திரங்களில் நடித்து, என் தனித்திறமையை வெளிப்படுத்துவேன். அழுமூஞ்சி வேடங்கள் இல்லாமல், அதிரடி வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன்...' என்கிறார்.

- எலீசா

அதிரடி காட்டும், அர்ஜுன்!

சமீபகாலமாக வில்லன் வேடங்களிலும் நடிக்க துவங்கிவிட்ட, அர்ஜுன், தற்போது ஒரு படத்தில் மீண்டும், 'ஹீரோ'வாக நடிக்கப் போகிறார். அர்ஜுன் என்றாலே, 'ஆக்ஷன்' என்றாகி விட்டதால், குடும்ப கதையில் உருவாகும் இந்த படத்திலும் கூட, 'தனக்கு, ஆறு அதிரடி சண்டை காட்சிகள் இருக்க வேண்டும்...' என்று, 'கண்டிஷன்' போட்டுள்ளார், அர்ஜுன்.

மேலும், தனக்கு, 63 வயதாகிவிட்ட போதும், தளர்ச்சி எதுவும் தெரியாத அளவுக்கு, 'ஆக்ஷன்' காட்சிகளில், நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.

-சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

* தளபதி நடிகரின் மூன்றெழுத்து படத்தில் ஏற்கனவே நடித்திருந்த, முகமூடி நடிகை, தற்போது அவரது கடைசி படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் அவருக்கு பெரிய ரோல் என்று சொல்லி மிகச் சிறிய வேடமே கொடுத்து விட்டனர். அதுமட்டுமின்றி, 'எடிட்டிங்' என்ற பெயரில், அம்மணி கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை, 'கட்' பண்ணி எறிந்து விட்டனராம். இதனால், 'பெரிய நடிகரின் படம் என்று நம்பி நடித்த என்னை, துக்கடா நடிகையாக்கி விட்டனர்...' என்று புலம்பி வருகிறார், முகமூடி நடிகை.

அரசியல்வாதி ஆன பிறகு, தளபதியின் கேரக்டரே மாறிவிட்டது என்றும் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து வருகிறார்.

* அடுத்த ரவுண்டுக்காக காமக்கொடூர நடிகையாக, காக்கா முட்டை நடிகை அவதரித்த போதும், அபிமான, 'ஹீரோ'கள் ஒருத்தர் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், செம கடுப்பில் இருந்து வரும், அம்மணி, 'இப்போதுதான், 'ஹீரோ'களாக நடித்து வரும் பலரது ரியல் முகத்தை தெரிந்து கொண்டேன். எல்லாருமே என்னை கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டனர்...' என்று, தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார், காக்கா முட்டை நடிகை.

மேற்படி நடிகர்கள் ஒரு காலத்தில் தன்னிடம் எப்படி எல்லாம் வழிந்து கொண்டு திரிந்தனர் என்பதையும் கோலிவுட்டில் கசிய விட்டு, அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

சினி துளிகள்!

* விஜயுடன், ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, அடுத்து, ராகவா லாரன்சின், காஞ்சனா -4 படத்தில் நடித்து வருகிறார்.

* புதிய பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விரைவில் திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

* ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஹிந்தியை கற்றுக் கொண்டதாக கூறுகிறார் இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us